3ஆம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் 93 தொகுதிகள் எவை தெரியுமா? முழு விவரம் இதோ!
டெல்லி: 18 ஆவது லோக்சபா தேர்தலில் இன்று 3 ஆவது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் எவை தெரியுமா?
தமிழகத்தில் முதல் கட்ட லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியும் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும் நடந்து முடிந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் 3ஆவது கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான பிரச்சாரம் கடந்த 5 ஆம் தேதியுடன் ஓய்ந்தது.

இந்த தேர்தலில் 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களின் 93 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அந்த தொகுதிகள் எவை எவை தெரியுமா?
அஸ்ஸாம் - 4
பீகார் 5
சத்தீஸ்கர் 7
தத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ யூனியன் பிரதேசங்கள் 2
கோவா 2
குஜராத் 25
கர்நாடகா 14
மத்திய பிரதேசம் 9
மகாராஷ்டிரா 11
உத்தரப் பிரதேசம் 10
மேற்கு வங்கம் 4
தொகுதிகளின் முழு விவரம்:
அஸ்ஸாம்: துப்ரி, கோக்ரஜார், பார்பெட்டா, குவஹாத்தி
பீகார்: ஜாஞ்சர்பூர், சுபால், அராரியா, மாதேபுரா, காக்ரியா
கோவா: வடக்கு கோவா, தெற்கு கோவா
குஜராத்: கட்ச், பனஸ்கட்டா, படன், மகேசனா, சபர்கந்தா, காந்திநகர், அகமதாபாத் கிழக்கு, அகமதாபாத் மேற்கு, சுரேந்திரநகர், ராஜ்கோட், போர்பந்தர், ஜாம்நகர், ஜூனாகத், அம்ரேலி, பாவ்நகர், ஆனந்த், கெடா, பஞ்சமஹால், தாஹோத், வதோதரா, சோட்டா உதய்பூர், பருச், பர்தோலி , சூரத், நவ்சாரி, வல்சாத்
கர்நாடகா: சிக்கோடி, பெல்காம், பாகல்கோட், பிஜாப்பூர், குல்பர்கா, ராய்ச்சூர், பிதார், கொப்பல், பெல்லாரி, ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடா, தாவாங்கேரே, ஷிமோகா மத்தியப் பிரதேசம்: பிந்த், போபால், குணா, குவாலியர், மொரேனா, ராஜ்கர், சாகர், விதிஷா, (பேதுல்)
மகாராஷ்ரா: பாராமதி, ராய்காட், உஸ்மானாபாத், லத்தூர், சோலாப்பூர், மாதா, சாங்லி, சதாரா, ரத்னகிரி-சிந்துதுர்க், கோலாப்பூர், ஹட்கானங்கல்
உத்தரப்பிரதேசம்: சம்பல், ஹத்ராஸ், ஆக்ரா, பதேபூர் சிக்ரி, பிரோசாபாத், மைன்புரி, எட்டா, புடான், ஆன்லா, பரேலி
மேற்கு வங்காளம்: மல்தஹா உத்தர், மல்தஹா தக்சின், ஜாங்கிபூர், முர்ஷிதாபாத்
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி/ டாமன் மற்றும் டையூ: தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ
(ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் நாளை நடைபெற இருந்த வாக்குப் பதிவு மே 25-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது)












Click it and Unblock the Notifications