4 மத்திய அமைச்சர்கள்! 4 மாஜி முதல்வர்கள்! 5 அமைச்சர்களின் வாரிசுகள்! லோக்சபா தேர்தலில் போட்டி!
டெல்லி: 18 ஆவது லோக்சபா தேர்தலில் இன்று 3 ஆவது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகளில் போட்டியிடும் 4 மத்திய அமைச்சர்கள், 4 மாஜி முதல்வர்கள், 5 கர்நாடக அமைச்சர்களின் வாரிசுகள் யார் யார் தெரியுமா?
தமிழகத்தில் முதல் கட்ட லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியும் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும் நடந்து முடிந்தது. முதல் கட்ட தேர்தலில் 102 லோக்சபா தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் 3ஆவது கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான பிரச்சாரம் கடந்த 5 ஆம் தேதியுடன் ஓய்ந்தது.
இந்த நிலையில் 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களின் 94 தொகுதிகளில் இன்று லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 93 தொகுதிகளில் 79 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வென்றது. காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களை மட்டுமே பெற்றது.
இன்று நடைபெறும் இந்த லோக்சபா தேர்தலில் களம் காணும் விஐபி வேட்பாளர்கள் யார்?:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (காந்தி நகர், குஜராத்)
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா (பாஜக, குணா, மத்தியப் பிரதேசம்)
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி (பாஜக, தார்வாட், கர்நாடகா)
மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா (பாஜக, ராஜ்கோட், குஜராத்)
டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி கட்சி, மைன்புரி, உத்தரபிரதேசம்)
ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, (காங்கிரஸ், பெர்ஹாம்பூர், மேற்கு வங்கம்)
பத்ருதீன் அஜ்மல், (ஏஐயுடிஎப், துப்ரி, அஸ்ஸாம்)
முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் (பாஜக, விதிஷா, மத்திய பிரதேசம்)
முன்னாள் முதல்வர் திக்விஜய சிங் (காங்கிரஸ், ராஜ்கர், மத்திய பிரதேசம்)
சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ், பாராமதி, மகாராஷ்டிரா)
முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை (பாஜக, ஹாவேரி, கர்நாடகா)
முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக, பெலகாவி, கர்நாடகா)
பி.ஒய்.ராகவேந்திரா (முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன், ஷிமோகா, பாஜக, கர்நாடகா)
கீதா சிவராஜ்குமார் (கன்னட நடிகர் சிவராஜ்குமார் மனைவி, ஷிமோகா, காங்கிரஸ், கர்நாடகா)
கர்நாடகா விஐபி வேட்பாளர்கள்
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி; முன்னாள் முதல்வர்கள் ஜெகதீஷ் ஷெட்டர்; பசவராஜ் பொம்மை; முன்னாள் அமைச்சர்கள் கோவிந்த் கார்ஜோள், ஶ்ரீராமுலு, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் ராகவேந்திரா, முன்னாள் சபாநாயகர் விஸ்வேசுர ஹெக்டே காகேரி, முன்னாள் முதல்வர் பங்காரப்பா மகளும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் மகளுமான கீதா சிவராஜ்குமார், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டமணி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி குமார் நாயக், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட ஈஸ்வரப்பா.
கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர்கள் 5 பேரின் மகன்,மகள்களும் களம் காண்கின்றனர். அமைச்சர்கள் மகாதேவப்பா மகன் சுனில் போஸ், சதீஸ் ஜார்கிகோளி மகள் பிரியங்கா, மல்லிகார்ஜூன் மனைவி பிரபா, லட்சுமி ஹெப்பால்கர் மகன் மிருணாள் ரவீந்திரா, ஈஸ்வர் கண்ட்ரேயின் மகன் சாகர் ஆகியோரும் களம் காண்கின்றனர்.












Click it and Unblock the Notifications