நாளை மறுநாள் 4ஆம் கட்ட தேர்தல் நடக்கும் 96 தொகுதிகள் எவை? எந்த கட்சி ஆதிக்கம் அதிகம்? முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாளை மறுநாள் மொத்தம் 96 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதில் எந்த தொகுதிகள் இப்போது எந்த கட்சியின் வசம் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

நாளை மறுநாள் திங்கள்கிழமை 4ஆம் கட்ட லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கான பிரச்சாரம் இன்று மாலை நிறைவடைகிறது. எந்தெந்த தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அதில் எந்த கட்சிகள் ஆட்சியில் உள்ளன என்பது குறித்துப் பார்க்கலாம்.

Lok Sabha election 4th phase which party holds which constituencies from BJP to Congress

ஒட்டுமொத்தமாக 96 இடங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், இதில் பாஜகவிடம் அதிகபட்சமாக 41 சீட்கள் உள்ளன. காங்கிரஸ் வசம் 5 தொகுதிகள் மட்டுமே உள்ளன. ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸிடம் 17 தொகுதிகள், திரிணாமுல் காங்கிரஸ் -5 தொகுதிகள், தெலுங்கு தேசம் - 4 தொகுதிகள் மற்றும் பிஆர்எஸ் கட்சியிடம் 3 தொகுதிகள் உள்ளன.

ஆந்திரா: இதில் ஆந்திராவில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அதில் அதிகபட்சமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வசம் 17 சீட்கள் உள்ளன. தெலுங்கு தேசம் கட்சியிடம் 4 எம்பிக்கள் உள்ள நிலையில், பவன் கல்யாணின் ஜன சேனாவிடம் ஒரு எம்பி உள்ளனர். 3 சீட்கள் காலியாக உள்ளன. ஆந்திராவில் எந்த தொகுதியில் யார் எம்பியாக உள்ளார் என்பதைப் பார்க்கலாம்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸிடம் 17 தொகுதிகள்: அருகு- கோட்டேடி மாதவி, விஜயநகரம்- பெல்லானா சந்திர சேகர் , விசாகப்பட்டினம்- எம்.வி.வி.சத்யநாராயணா, அனகப்பள்ளி - பீசெட்டி வெங்கட சத்தியவதி, காக்கிநாடா- வங்க கீதா, அமலாபுரம் -சிந்தா அனுராதா, ராஜமுந்திரி- மார்கனி பாரத், ஏலூர்- கோத்தகிரி ஸ்ரீதர், பாபட்லா - நந்திகம் சுரேஷ், நந்தியால்- போச்சா பிரம்மானந்த ரெட்டி, அனந்தபூர்- தலாரி ரங்கய்யா, இந்துபூர்- குருவா கோரண்ட்ல மாதவ், கடப்பா- ஒய்.எஸ். அவினாஷ் ரெட்டி. நெல்லூர்- அடலா பிரபாகர ரெட்டி, திருப்பதி- மட்டில குருமூர்த்தி, ராஜம்பேட்டை- பி.வி. மிதுன் ரெட்டி, சித்தூர் - என். ரெட்டப்பா..

ஸ்ரீகாகுளம்- ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, நரசாபுரம்- ரகு ராம கிருஷ்ண ராஜு, குண்டூர்- கல்லா ஜெயதேவ், ஓங்கோல்- மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டி ஆகிய 4 தொகுதிகள் தெலுங்கு தேசம் வசம் உள்ளது. மச்சிலிப்பட்டினம்- வல்லபனேனி பாலசௌரி தொகுதியில் இருந்து மட்டும் ஜன சேனா கட்சி எம்பி தேர்வாகி உள்ளார். விஜயவாடா, நரசராவ்பேட்டை, கர்னூல் ஆகிய மூன்று தொகுதிகள் காலியாக உள்ளன.

தெலுங்கானா: தெலுங்கானாவில் மொத்தம் 17 தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு அதிகபட்சமாக பாஜக வசம் 6 தொகுதிகள் உள்ளன. அதேபோல காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் வசம் தலா 3 தொகுதிகள் உள்ள நிலையில், மஜ்லீஸ் கட்சியிடம் ஒரு தொகுதி உள்ளது. அங்கு 4 சீட்கள் காலியாக உள்ளன. அங்கு எந்த தொகுதியில் யார் எம்பியாக உள்ளார் என்பதைப் பார்க்கலாம்.

அடிலாபாத் - சோயம் பாபு ராவ், கரீம்நகர்- பாண்டி சஞ்சய் குமார், நிஜாமாபாத்- தர்மபுரி அரவிந்த், ஜாஹிராபாத்- B. B. பாட்டீல், செகந்திராபாத்- ஜி. கிஷன் ரெட்டி, நாகர்கர்னூல் - பொதுகண்டி ராமுலு ஆகிய 5 தொகுதிகள் பாஜக வசம் இருக்கிறது. பெத்தபள்ளி- வெங்கடேஷ் நேதா போர்லகுண்டா, செவெல்லா- ஜி. ரஞ்சித் ரெட்டி, வாரங்கல் - பசுனூரி தயாகர் ஆகிய 3 தொகுதிகள் காங்கிரஸ் வசம் இருக்கிறது.

மகபூப்நகர்- மன்னே ஸ்ரீனிவாஸ் ரெட்டி, மஹபூபாபாத்- கவிதா மாலோத், கம்மம்- நாம நாகேஸ்வர ராவ் ஆகிய தொகுதிகள் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி வசம் இருக்கிறது. மேடக், மல்காஜ்கிரி, நல்கொண்டா, போங்கீர் ஆகிய நான்கு தொகுதிகள் காலியாக உள்ளன.

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் மொத்தம் 13 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்த 13 தொகுதிகளும் இப்போது பாஜக வசமே உள்ளன. ஷாஜஹான்பூர்- அருண் குமார் சாகர், கெரி- அஜய் குமார் மிஸ்ரா, தௌராஹ்ரா- ரேகா வர்மா, சீதாபூர்- ராஜேஷ் வர்மா, ஹர்தோய்- ஜெய்பிரகாஷ் ராவத், மிஸ்ரிக்- அசோக் குமார் ராவத், உன்னாவ்- சாக்ஷி மகாராஜ், ஃபரூகாபாத்- முகேஷ் ராஜ்புத், எட்டாவா- ராம் சங்கர் கத்தேரியா, கன்னோஜ்- சுப்ரத் பதக், கான்பூர்- சத்யதேவ் பச்சௌரி, அக்பர்பூர்- தேவேந்திர சிங் போலே, பஹ்ரைச்- அக்ஷய்பர் லால் எம்பியாக உள்ளனர்.

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 11 தொகுதிகளில் இந்தக் கட்டத்தில் தேர்தல் நடக்கும் நிலையில், அதில் பாஜகவிடம் 5 தொகுதிகள் உள்ளன. ஷிண்டே சிவசேனாவிடம் இரு தொகுதிகள் உள்ள நிலையில், மஜ்லீஸ் கட்சி மற்றும் என்சிபி கட்சியிடம் தலா ஒரு இடம் உள்ளது. இரண்டு சீட்கள் காலியாக உள்ளன.

நந்துர்பார்- ஹீனா காவிட், ராவர்- ரக்ஷா காட்சே, ஜல்னா- ராவ்சாகேப் தன்வே, அகமதுநகர்- சுஜய் விகே பாட்டீல், பீட்- ப்ரீதம் முண்டே ஆகிய தொகுதிகள் பாஜக வசம் உள்ளன. மாவல்- ஸ்ரீரங் பார்னே, ஷீரடி- சதாசிவ் லோகண்டே ஷிண்டே சிவசனோவிடம் உள்ளன. மஜ்லீஸ் கட்சியிடம் அவுரங்காபாத்- இம்தியாஸ் ஜலீல், என்சிபி கட்சியிடம் ஷிரூர்- அமோல் கோல்ஹே உள்ளன. மேலும், ஜல்கான், புனே தொகுதிகள் காலியாக உள்ளன.

மத்திய பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் இந்த முறை எட்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இவை அனைத்துமே இப்போது பாஜக வசம் தான் உள்ளன. தேவாஸ் - மகேந்திர சோலங்கி, உஜ்ஜைன் - அனில் ஃபிரோஜியா, மண்ட்சூர்- சுதீர் குப்தா, ரத்லாம் - குமன் சிங் டாமோர், தர் - சட்டர் சிங் தர்பார், இந்தூர்- சங்கர் லால்வானி, கர்கோன்- கஜேந்திர படேல், கந்த்வா - ஞானேஸ்வர் பாட்டீல் எம்பியாக உள்ளனர்.

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளில் தேர்தல் நடக்கும நிலையில், திரிணாமுல் வசம் 5 இடங்கள் உள்ளன. காங்கிரஸ் மற்றும் பாஜக வசம் தலா ஒரு தொகுதிகள் உள்ளன. பர்தமான் பூர்பா- சுனில் குமார் மண்டல், பர்தமான்-துர்காபூர்- எஸ்.எஸ். அலுவாலியா, அசன்சோல்- சத்ருகன் சின்ஹா, போல்பூர் - அசித் குமார் மால், பிர்பும்- சதாப்தி ராய் தொகுதிகள் திரிணாமுல் வசம் உள்ளன. பஹரம்பூர்- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி காங்கிரஸ் வசம், ரனாகாட்-ஜகன்னாத் சர்க்கார் பாஜக வசம் உள்ளன. கிருஷ்ணாநகர் தொகுதி மட்டும் காலியாக உள்ளன.

பீகார்: பீகாரில் 5 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதில் 3 தொகுதிகள் பாஜக வசம் உள்ள நிலையில், ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி மற்றும் ஜேடியு கட்சியிடம் தலா ஒரு சீட் உள்ளன. தர்பங்கா- கோபால் ஜீ தாக்கூர், உஜியார்பூர்-நித்யானந்த் ராய், பெகுசராய்- கிரிராஜ் சிங் ஆகியவை பாஜக வசம் உள்ளன. சமஸ்திபூர்- பிரின்ஸ் ராஜ் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியிடமும், முங்கர்-லலன் சிங் ஜேடியு கட்சியிடமும் உள்ளன.

இதர மாநிலங்கள்: ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடக்கும் 4 தொகுதிகளும் பாஜக வசம் உள்ளன. சிங்பூம்- கீதா கோடா, குந்தி -அர்ஜுன் முண்டா, லோஹர்டகா -சுதர்சன் பகத், பலாமு - விஷ்ணு தயாள் ராம் ஆகிய பாஜக எம்பிகள் தேர்தலை எதிர்கொள்கிறார்கள்.

ஒடிசாவில் 4 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அதில் இரு தொகுதிகள் நாபரங்பூர்- ரமேஷ் சந்திர மாஜி, பெர்ஹாம்பூர்-சந்திர சேகர் சாஹு பிஜு ஜனதா தளம் வசம் உள்ளன. கலஹண்டி- பசந்த குமார் பாண்டா பாஜக எம்பியாக உள்ள நிலையில், கோராபுட் -சப்தகிரி சங்கர் உலக காங்கிரஸ் வசம் உள்ளன. காஷ்மீரில் ஸ்ரீநகர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு ஜம்மு காஷ்மீர் மாநாட்டு கட்சியின் ஃபரூக் அப்துல்லா எம்பியாக உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+