"இமாலய வெற்றி.." 400ஐ தொடும் என்டிஏ கூட்டணி! பாஜகவுக்கு மட்டும் 335 சீட்- டுடே சாணக்யா எக்சிட் போல்
டெல்லி: நமது நாட்டில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இதில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று டுடே சாணக்யா நடத்திய எக்சிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த முறை மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதலாம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற்ற நிலையில், நேற்று கடைசிக் கட்ட தேர்தல் நடைபெற்றது.

நமது நாட்டில் 543 தொகுதிகள் இருக்கிறது.. அதில் எந்தவொரு கட்சி அல்லது கூட்டணி 272 தொகுதிகளில் வெல்கிறதோ அவர்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கும். ஆட்சியையும் அமைக்க முடியும்.
தேர்தலுக்கு பிந்தைய சர்வே: இந்த முறை தேசியளவில் பார்க்கும் போது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவி வருகிறது. இரு தலைவர்களும் கடுமையான பிரச்சாரம் செய்தனர். வாக்குப்பதிவு இப்போது முடிந்துள்ள நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையே லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், பல்வேறு ஊடகங்களும் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.
பாஜகவுக்கு மெகா வெற்றி: இதற்கிடையே டுடே சாணக்யா அமைப்பு நாடு முழுக்க நடத்திய எக்ஸிட் போல் சர்வே ரிசல்டை வெளியிட்டுள்ளது. அதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 400 சீட்களில் (Plus/Minus 15) வெல்ல வாய்ப்புள்ளதாக டுடே சாணக்யா எக்ஸிட் போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அதிக பாஜக மட்டும் 335 இடங்களில் வெல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பாஜக கடந்த லோக்சபா தேர்தலில் 303 இடங்களில் வென்றிருந்த நிலையில், அதைக் காட்டிலும் கூடுதல் இடங்களில் பாஜக வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ்: அதேபோல எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 107 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக டுடே சாணக்யா எக்ஸிட் போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி மட்டும் 50 இடங்களைக் கைப்பற்றும் என்று டுடே சாணக்யா எக்ஸிட் போல் சர்வே கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கடந்த முறை 52 இடங்களில் வென்றிருந்த நிலையில், அதை விட இரண்டு இடங்கள் குறைவாகவே வெல்லும் என இதில் கூறப்பட்டுள்ளது.
இதர கட்சிகள் 36 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக வாய்ப்புள்ளதாக டுடே சாணக்யா எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம்: இதில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு 68 இடங்களில் பாஜக வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த முறை 62 இடங்களில் பாஜக வென்ற நிலையில், அதைக் காட்டிலும் கூடுதல் இடங்களில் வெல்லும் என்று டுடே சாணக்யா சர்வே கூறியுள்ளது. காங்கிரஸ்- சமாஜ்வாதி கூட்டணி 12 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்று தேர்தலுக்கு பிந்தைய சர்வேக்களில் கூறப்பட்டுள்ளது.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications