மோடி சுனாமி... பல மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று பாஜக அசத்தல்
Recommended Video
டெல்லி: பாரதிய ஜனதா கட்சி 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பல மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று அசத்தி உள்ளது.
மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பாஜக கூட்டணி சுமார் 350 இடங்களை கைப்பற்றி உள்ளது. தன்னகத்தே 300 இடங்களை பெற்று முன்பை விட வலிமையான மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், அரியானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பாரதிய ஜனதா பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 60 தொகுதிகளில் வென்று 49 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளை பெற்றள்ளது. இதேபோல் ராஜஸ்தானில் 25 தொகுதிகளில் 17 இல் வென்றும், மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகளில் 27 இடங்களில் வென்றும், சத்தீஸ்கரில் 11 தொகுதிகளில் 9இல் வென்றும் அதிக வாக்குகளை வாங்கி உள்ளது.
இதேபோல் அரியானாவில் 10 தொகுதிகளிலும், ஜார்கண்டில் 14 தொகுதிகளில் 11 இடங்களிலும் குஜராத்தில் 26 தொகுதிகளில் 25 இடங்களிலும் வென்று பாஜக அதிக வாக்குகளை வென்று அசத்தி உள்ளது.
இதேபோல் மகாராஷ்டிராவில் பாஜக 23 தொகுதிகளிலும், பீகாரில் 16 தொகுதிகளிலும் வென்று அதிக அளவு வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது பாஜக.












Click it and Unblock the Notifications