பாஜக vs "இந்தியா" கூட்டணி.. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை! அடுத்து என்ன
டெல்லி: இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தல் கடந்த 1 ஆம் தேதியோடு முடிந்தது. இதற்கிடையே இப்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இதில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது வரை பாஜக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் இந்தியா கூட்டணி 235 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. நமது நாட்டின் ஜனநாயக திருவிழா என அழைக்கப்படும் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக ஜூன் 01 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இன்று வாக்கு எண்ணிக்கை: 543 தொகுதிகளில் கடந்த 1.5 மாதங்களுக்கு மேலாக நடந்த தேர்தல் முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகி இருந்தார். இதனால் ஏனைய தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பாஜகவா? காங்கிரசா?: காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்று வாரியாக நடந்து வருகிறது.. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் முன்னிலை நிலவரம் உடனுக்கு உடன் அறவிக்கப்பட்டு வருகிறது. காலை 9 மணியில் இருந்தே முன்னிலை நிலவரம் தெரிய வந்துவிட்டது. இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தற்போது வரை பாஜக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. பாஜக கூட்டணியைப் பொறுத்தவரை பாஜக 239 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும் ஜேடியு 12 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அதேபோல ஷிண்டே சிவசேனா 6 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
இந்தியா கூட்டணியை பொறுத்தவரை அவர்கள் 235 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 99 தொகுதிகள், சமாஜ்வாதி 37 தொகுதிகள், திரிணாமுல் 30 தொகுதிகள், திமுக 22 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், எந்தக் கட்சிகள் எத்தனை இடங்களைக் கைப்பற்றி உள்ளது என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.
மேலும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலே இப்போது நிலவுகிறது. பாஜக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கப் போகிறதா.. இல்லை சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரை தங்கள் பக்கம் இழுத்து "இந்தியா" கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.
-
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!












Click it and Unblock the Notifications