Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா.. நாட்டிலேயே மிக அதிக வாக்கு வித்தியாசம் எவ்வளவு தெரியுமா? நூலிழையில் தோற்றது யார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் நாட்டிலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்கள் யார் யார் என பார்க்கலாம்.

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 543 இடங்களில் பாஜக கூட்டணி 291 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தனியாக 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress india alliance 2024 2024 politics

மிக அதிக வாக்கு வித்தியாசம்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஷங்கர் லால்வானி 11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அங்கு நோட்டா இரண்டு லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. நோட்டாவை விட பாஜக வேட்பாளர் 10.08 லட்சம் வாக்குகள் அதிகம் என்றாலும், வாக்கு வித்தியாசம், இரண்டாம் இடம் பிடித்த வேட்பாளரை வைத்தே கணக்கிடப்படும் என்பதால் 11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார் சங்கர் லால்வானி.

இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காந்தி பாம் கடைசி நிமிடத்தில் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் இல்லாததால், இந்தூரில் சங்கர் லால்வானிக்கு வெற்றி எளிதாக இருந்தது. தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியினர் நோட்டாவுக்காக பிரச்சாரம் செய்தனர். அதன் காரணமாக அங்கு நோட்டா இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

1989 ஆம் ஆண்டு முதல் இந்தூர் தொகுதியை பாஜக தக்க வைத்துக் கொண்டுள்ளது. லால்வானிக்கு முன், 2014 முதல் 2019 வரை மக்களவையின் சபாநாயகராகப் பணியாற்றிய பாஜக உறுப்பினர் சுமித்ரா மகாஜன், எட்டு முறை தொடர்ந்து அங்கு எம்.பி பதவியை வகித்தார்.

காங் வேட்பாளர் 10 லட்சம் வித்தியாசம்: அதற்கு அடுத்த இடத்தில் அசாம் மாநிலம் துப்ரி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகிபுல் ஹுசைன் 10.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், விதிஷா லோக்சபா தொகுதியில் 8,21,408 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக குஜராத் பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் 7.73 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தில் உள்ள நவ்சாரி தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.பி.யாக இருந்த சி.ஆர்.பாட்டீல், இரண்டாவது அதிக வாக்கு வித்தியாசத்தில் தனது முந்தைய சாதனையை முறியடித்து 7,73,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

அமித் ஷா இமாலய வெற்றி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 7.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். டயமண்ட் ஹார்பர் (மேற்கு வங்கம்) தொகுதியில் அபிஷேக் பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்) 7,10,930 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பல பாஜக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சில பாஜக வேட்பாளர்கள்:

விதிஷா தொகுதி - சிவராஜ் சிங் சவுகான் (பாஜக) - வித்தியாசம்: 8,21,408

மண்ட்சூர் தொகுதி - சுதீர் குப்தா (பாஜக) வாக்கு வித்தியாசம் : 500655

போபால் தொகுதி அலோக் ஷர்மா (பாஜக) வித்தியாசம்: 501499

கஜுராஹோ தொகுதி - விஷ்ணு தத் ஷர்மா (பாஜக): வித்தியாசம்: 541229

குணா தொகுதி ஜோதிராதித்யா சிந்தியா (பாஜக) வித்தியாசம்: 540929

மற்ற மாநிலங்களில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சில வேட்பாளர்கள் இங்கே:

திருவள்ளூர் தொகுதி (தமிழ்நாடு) சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) : வித்தியாசம்: 5,72,155

கௌதம் புத்த நகர் (உ.பி) டி.ஆர். மகேஷ் ஷர்மா (பாஜக) வித்தியாசம்: 559472

விசாகப்பட்டினம் (ஆந்திர பிரதேசம்)) ஸ்ரீபரத் மதுக்குமிலி (தெலுங்கு தேசம்) 504247 வித்தியாசம்

மிகக் குறைந்த வித்தியாசம்: மகாராஷ்டிர மாநிலம் மும்பை வடமேற்கு தொகுதியில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் அமோல் கிர்த்திகரை எதிர்த்து சிவசேனாவின் ரவீந்திர வைகர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாட்டிலேயே இவர் தான் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+