லோக்சபா தேர்தல் 2024.. பாஜகவிற்கு நோ மெஜாரிட்டி.. அடித்து ஆடும் "இந்தியா" கூட்டணி.. பரபர சர்வே!
டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
2024 லோக்சபா தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. ஒரு பக்கம் பாஜக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. தனது தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகளை சந்தித்து தேர்தலுக்கான ஆலோசனைகளையும் பாஜக மேற்கொண்டுவிட்டது.

இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன.
திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர். 26 கட்சிகள் மோடிக்கு எதிராக ஒன்று கூடி உள்ளனர். ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்தன. சமீபத்தில் நடந்த இரண்டாம் கட்ட கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கருத்து கணிப்பு: இந்த தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் அடுத்தடுத்து வெளியாக தொடங்கி உள்ளன. அதன்படி 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
PCSurveysIndia அதாவது Political Critic என்ற அமைப்பு இந்த கருத்து கணிப்பை வெளியிட்டு உள்ளது. கடந்த கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணித்தது இந்த அமைப்புதான்.
கடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில்
காங்கிரஸ் : 135 - 145
பாஜக: 65 - 70
மஜத: 10 - 15
மற்றவர்கள்: 5- 10
என்று இந்த அமைப்பு கணிப்பு வெளியிட்டு இருந்தது.
அதன்படியே காங்கிரஸ் 136 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. அதேபோல் தற்போது லோக்சபா தேர்தலுக்கான கருத்து கணிப்பை இந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி
பாஜகவின் என்டிஏ கூட்டணி : 255 இடங்கள்
எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி: 225 இடங்கள்
மற்ற கட்சிகள் : 63 இடங்கள்
வெல்லும் என்று இந்த அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது.
நாடாளுமன்றத்தில் மொத்தம் 543 இடங்கள் உள்ளன. இதில் மெஜாரிட்டி பெற 272 இடங்கள் தேவை. இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி (332) இடங்களையும் பாஜக தனியாக 301 இடங்களையும், காங்கிரஸ் 49 இடங்களையும் வென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. கூட்டணி கட்சிகள் பிரிந்து அணி மாறினால் ஏதாவது ஒரு அணி ஆட்சி அமைக்கும். முக்கியமாக கூட்டணியில் இடம்பெறாத மற்ற கட்சிகள் ஆதரவு அளித்தால் பாஜக அல்லது காங்கிரஸ் கூட்டணியில் ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications