Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2014 லோக்சபா தேர்தல் முடிவுகளை அச்சு பிசகாமல் கணித்தது நியூஸ் 24 சாணக்கியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 2014 ஆம் ஆண்டு எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து செய்தி நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பை பார்க்கலாம்.

நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4 ஆம் தேதி நடத்தப்படுகிறது.

lok sabha election 2024 lok sabha election 2014 nda upa 2024 2014

கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டும் மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டும் பிரதமராக மோடியே 3ஆவது முறை வர வேண்டும் என பாஜக கூட்டணியினர் பிரச்சாரம் செய்து வந்தனர்.

மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற பிரச்சாரத்தை முன் நிறுத்தியிருந்தனர். ஆனால் பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 370 சட்டப்பிரிவு நீக்கம், நீட் தேர்வு, குடியுரிமை சட்டம் உள்ளிட்டவைக்கு எதிராக காங்கிரஸ் பிரச்சாரம் செய்திருந்தது. இதனால் பாஜகவும் காங்கிரஸும் இந்த முறை ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது.

ஜூன் 4ஆம் தேதி தேர்தல் வருவதற்கு முன்னர் இன்றைய தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் செய்திநிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிடும் போது அதில் ஏதாவது சில நிறுவனங்கள் உண்மையான முடிவுகளுடன் ஒத்து போகும்.

அந்த வகையில் 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்தெந்த செய்தி நிறுவனங்கள் எந்த மாதிரியான கருத்துக் கணிப்புகளை நடத்தினர் என்பதை பார்க்கலாம். அதில் ஏபிபி நியூஸ் நீல்சன் காங்கிரஸ் கூட்டணி 97 இடங்களிலும் பாஜக கூட்டணி 274 இடங்களிலும் வெல்லும் என கணித்திருந்தனர்.

அது போல் சிஎன்என் ஐபிஎன் - சிஎஸ்டிஎஸ் என்ற ஏஜென்சியோ காங்கிரஸ் கட்சி 97 இடங்களிலும் பாஜக கூட்டணி 280 இடங்களிலும் வெல்லும் என குறிப்பிட்டிருந்தது. சிஎன்என் ஐபிஎன் லோக்நிதி காங்கிரஸ் கூட்டணி 97 இடங்களிலும் பாஜக கூட்டணி 276 இடங்களிலும் வெல்லும் என கணித்திருந்தது.

இந்தியா டுடே சிசிரோவோ காங்கிரஸ் கூட்டணி 115 இடங்களிலும் பாஜக கூட்டணி 272 இடங்களில் வெற்றி பெறும் என கணித்திருந்தது. அது போல் இந்தியா டிவி சி வோட்டர் பாஜக கூட்டணி 389 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 101 இடங்களிலும் என்டிடிவி ஹன்ஸா பாஜக கூட்டணி 279 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 101 இடங்களிலும் வெல்லும் என கணித்திருந்தது.

நியூஸ் 24 சாணக்கியா கணிப்பில் பாஜக கூட்டணி 340 இடங்களிலும் காங்கிரஸ் 70 இடங்களிலும் வெல்லும் என்றும் டைம்ஸ் நவ் ஓஆர்ஜி பாஜக கூட்டணி 249 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 148 இடங்களிலும் வெல்லும் என தெரிவித்திருந்தது. அது போல் ஆவரேஜ் என்ற நிறுவனம் தனது கணிப்பில் பாஜக கூட்டணி 283 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 105 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த ஆண்டு வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 336 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 60 இடங்களிலும் வென்றது. பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது.

அந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 30 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களில் வென்றது. தேமுதிக 14 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெல்லவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியோ 8 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வென்றது.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் அதிமுக கூட்டணியே இல்லாமல் 39 இடங்களில் போட்டியிட்டது, அதில் 37 இடங்களில் வென்றது. திமுக கூட்டணியோ 34 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அது போல் விடுதலைச் சிறுத்தைகள் இரு இடங்களிலும், புதிய தமிழகம் ஒரு இடத்திலும் மனிதநேய மக்கள் கட்சி ஒரு இடத்திலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு இடத்திலும் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சிகளில் மார்க்சிஸ்ட் கட்சி 9 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களிலும் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. செய்தி நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் நியூஸ் 24 சாணக்கியாதான் 340 இடங்கள் என உண்மையான தேர்தல் முடிவுகளுடன் நெருங்கி வந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+