Republic TV எக்ஸிட் போல் முடிவுகள் 2024:மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடி..அடித்து தூக்கும் என்டிஏ!
டெல்லி: நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக அதிக இடங்களை பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்த லோக்சபா தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாகும்.

பாஜகவை பொறுத்த அளவில், மோடி மீண்டும் பிரதமரானால், நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையை அவர் பெறுவார். அதேபோல, 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்காக பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருக்க வேண்டியது முக்கியம்.
காங்கிரஸை பொறுத்த அளவில் ஆட்சியில் இல்லாத இந்த 10 ஆண்டுகளில் குலாம் நபி ஆசாத் தொடங்கி பல்வேறு தலைவர்கள் கட்சியை விட்டு விலகி சென்றுள்ளனர். பல மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் இழந்திருக்கிறது. எனவே இந்த முறை மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் கட்சி இருக்கிறது. எனவே ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என முரண்பட்ட கட்சிகளை இந்தியா கூட்டணி என இணைத்து தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கிய லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
வாக்குச்சாவடிகளில் வாக்களித்துவிட்டு வரும் ஒவ்வொரு 10 வாக்காளர்களில் ஒருவரிடம், யாருக்கு வாக்களித்தீர்கள் என்கிற விவரம் கேட்கப்படும். அவர் கூற விரும்பும் பட்சத்தில் இப்படியாக தரவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்து கருத்து கணிப்புகளாக வெளியிடப்படும். சி-வோட்டர், ஆக்சிஸ் மை இந்தியா, சிஎன்எக்ஸ் ஆகிய அமைப்புகள் கருத்துக்கணிப்பு நடத்தும் அமைப்புகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது தவிர ஏராளமான மீடியாக்கள் கருத்துக்கணிப்பை வெளியிடுகின்றன.
அந்த வகையில் தற்போது ரிபப்ளிக் டிவி கருத்துக்கிணப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தேசிய அளவில் பாஜக 359 தொகுதிகளையும், காங்கிரஸ் 154 தொகுதிகளையும், 30 தொகுதிகளை இதர கட்சிகள் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது. வாக்கு சதவிகிதத்தை பொறுத்த அளவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 48 சதவிகித வாக்குகளையும், இந்தியா கூட்டணி 39 சதவிகித வாக்குகளையும், மற்ற கட்சிகள் 13 சதவிகித வாக்குகளையும் பெறும் என்று தெரிவித்திருக்கிறது.
-
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications