லோக்சபா தேர்தல்.. வடகிழக்கு மாநிலங்களில் கடும் போட்டி! காஷ்மீரில் "இந்தியா" ஆதரவு அதிகம்! புது சர்வே
டெல்லி: அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், இந்தத் தேர்தல் குறித்து டைமஸ் நவ் நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளது. இது குறித்துப் பார்க்கலாம்.
நாடு முழுக்க அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஒரு பக்கம் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. பிரதமர் மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதே அவர்கள் திட்டம்

மறுபுறம் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக் கூடாது என்பதற்காக பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து "இந்தியா" என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இதில் காங்கிரஸ், திரிணமுல், ஆம் ஆத்மி, திமுக எனப் பல கட்சிகள் இடம் பெற்றுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் களம் ஏற்கனவே சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. பல அரசியல் கட்சிகளும் கூட்டணி சார்ந்து முடிவுகளை எடுக்க ஆரம்பித்துவிட்டன. இதற்கிடையே லோக்சபா தேர்தல் குறித்து டைமஸ் நவ் நடத்திய சர்வே முடிவுகள் மாநில வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீரில் என்ன நிலை என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இதற்கிடையே லோக்சபா தேர்தல் குறித்து டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அதில் அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு பாஜகவின் கை சற்று ஓங்கி இருக்கிறது. அசாம் மாநிலத்தில் மொத்தம் 14 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே பாஜகவுக்கு 7-9 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. "இந்தியா" கூட்டணிக்கு 4-6 இடங்கள் கிடைக்கும். இதர கட்சிகள் 0-1 இடத்தில் வெல்ல வாய்ப்புள்ளதாக டைம்ஸ் நவ் சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.

இதில் வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 11 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கு பாஜகவின் என்டிஏ மற்றும் "இந்தியா" கூட்டணிக்கு இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 11 இடங்களில் என்டிஏ கூட்டணிக்கு 4-6 இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் "இந்தியா" கூட்டணிக்கு 3-5 இடங்களில் கிடைக்கும். மற்ற கட்சிகள் 1-3 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக டைம்ஸ் நவ் சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 6 இடங்கள் இருக்கிறது. அங்கே "இந்தியா" கூட்டணி கைதான் ஓங்கி இருக்கிறது. அங்குள்ள 6 இடங்களில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு 1-3 இடங்கள் கிடைக்கும். மறுபுறம் "இந்தியா" கூட்டணிக்கு 3-4 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 0-1 இடத்தில் வெல்ல வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications