மீண்டும் மோடி தான் பிரதமர்.. பாஜகவுக்கு இமாலய வெற்றி! "இந்தியா" கூட்டணி நோ சான்ஸ்! டைம்ஸ் நவ் சர்வே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் நிலையில், ஒட்டுமொத்தமாக லோக்சபா தேர்தலில் இந்த முறை எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம் கிடைக்கும் என்பது குறித்த டைம்ஸ் நவ் சர்வே முடிவுகளைப் பார்க்கலாம்.

இப்போது மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இருக்கிறது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. வழக்கம் போலப் பிரதமர் மோடியை முன்னிறுத்தியே பாஜக பிரச்சாரம் இருக்கும்.

 Lok Sabha Poll Times Now survey says BJP NDA alliance will thrash INDIA bloc

மற்றொரு புறம், காங்கிரஸ் திரிணாமுல், ஆம் ஆத்மி, திமுக என பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து இப்போது "இந்தியா" என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். அவர்கள் ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட்டனர்.

மொத்தம் 543 இடங்கள் இருக்கும் நிலையில், எந்தவொரு கட்சி அல்லது கூட்டணியும் ஆட்சியை அமைக்கக் குறைந்தது 272 இடங்கள் தேவை. கடந்த இரண்டு தேர்தல்களிலும் பாஜக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் நிலையில், இது தொடர்பான டைம்ஸ் நவ் சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.

 Lok Sabha Poll Times Now survey says BJP NDA alliance will thrash INDIA bloc

இதில் அடுத்தாண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுக்க 543 இடங்கள் இருக்கும் நிலையில், பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு 297-317 இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் "இந்தியா" கூட்டணிக்கு 165- 185 இடங்கள் கிடைக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்து பிராந்திய கட்சிகளான ஓய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சிக்கு 24-25 இடங்கள் கிடைக்கும் என்றும் மற்றொரு பிராந்திய கட்சியான பிஆர்எஸ் கட்சிக்கு 9-11 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஒடிசாவில் ஆளும் கட்சியாக உள்ள பிஜு ஜனதா தளம் கட்சிக்கு 13-15 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 11-14 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 Lok Sabha Poll Times Now survey says BJP NDA alliance will thrash INDIA bloc

இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், மூன்றாவது முறையாக பாஜகவின் என்டிஏ கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க உருவாக்கப்பட்டுள்ள "இந்தியா" கூட்டணிக்கு 200க்கும் குறைவான இடங்கள் வெல்லும் என்று இந்த டைம்ஸ் நவ் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் சர்வே-படி நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராவர் எனக் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+