லோக்சபா தேர்தல்! குஜராத்தில் அடித்து நொறுக்கும் பாஜக! "இந்தியா"கூட்டணி ரொம்ப பாவம்! டைம்ஸ் நவ் சர்வே
டெல்லி: லோக்சபா தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் நிலையில், இது தொடர்பாக டைம்ஸ் நவ் நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் எந்த கட்சி வெல்லும் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" என்ற கூட்டணியைத் தனியாக உருவாக்கியுள்ளது.

மறுபுறம் தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றே தீர வேண்டும் என்ற முடிவில் பாஜக களமிறங்கியுள்ளது. பிரதமர் மோடியை முன்னிறுத்தியே பாஜக பிரசாரம் செய்யும். தேர்தல் நடவடிக்கைகளை இப்போது அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டது.
இதற்கிடையே லோக்சபா தேர்தல் குறித்த டைம்ஸ் நவ் சர்வே முடிவு வெளியாகியுள்ளது. இதில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் யார் வெல்வார்கள் என்பது குறித்து பார்க்கலாம். அங்கே இப்போது பாஜகவே ஆட்சியில் இருக்கிறது. மேலும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வழக்கம் போல பாஜக ஆதிக்கம் செலுத்துகிறது. அங்கே பாஜக இமாலய வெற்றியைப் பெறும் என்று டைம்ஸ் நவ் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 26 இடங்கள் இருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக அத்தனை இடங்களிலும் பாஜகவின் என்டிஏ கூட்டணி வெல்லும் என கூறபட்டுள்ளது. "இந்தியா" கூட்டணிக்கும் சரி, மற்ற கட்சிகளுக்கும் சரி அங்கே ஒரு இடம் கூட கிடைக்காது என கூறப்பட்டுள்ளது.
அதேபோல சத்தீஸ்கர் மாநிலத்திலும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் என்டிஏ கூட்டணிக்கு 48.7% வாக்குகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல "இந்தியா" கூட்டணிக்கு 46.9% வாக்குகள் கிடைக்கும் என்றும் இதர கட்சிக்கு 4.40% வாக்குகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 11 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு 7-9 இடங்கள் கிடைக்கும் என்றும் "இந்தியா" கூட்டணிக்கு 2-4 இடங்கள் கிடைக்கும் என்றும் டைம்ஸ் நவ் சர்வே-இல் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு அங்கு எந்தவொரு இடமும் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இப்போது பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications