நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்.. லோக்சபா எம்பிக்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம்.. விஷயம் இதுதான்
டெல்லி: லோக்சபாவில் எம்.பிக்கள் இடைநீக்கம் செய்ததையும் பாதுகாப்பு விதிமீறல் சம்பவத்தையும் சில உறுப்பினர்கள் தொடர்பு படுத்தி பேசுவது துரதிர்ஷ்டவசமானது என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் கடந்த 13-ந் தேதி மிகப்பெரும் பாதுகாப்பு விதி மீறல் சம்பவம் நடைபெற்றது. லோக்சபாவின் பார்வையாளர் மாடத்தில் இருந்து சபைக்குள் குதித்த 2 வாலிபர்கள், வண்ண புகை குப்பிகளை வீசினர். அதேபோல நாடாளுமன்ற வளாகத்திலும் சிலர் ரகளை செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜாவை காவலில் எடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நாட்டின் ஜனநாயக கோவில் என்று வர்ணிக்கப்படும் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வண்ணக்குப்பிகளை வீசியது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பாதுகாப்பு குளறுபடியை உணர்த்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இந்த நிலையில், அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் உள்பட மொத்தம் 13 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா நடவடிக்கை எடுத்தார். சபாநாயகரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், லோக்சபா எம்.பிக்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஓம் பிர்லா கூறியிருப்பதாவது:- எம்.பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டது முழுக்க முழுக்க அவையின் கண்ணியத்தை நிலைநாட்டுவதற்காகத்தான். புதிய நாடாளுமன்ற அவை துவக்க விழாவின் போது, அவைக்குள் பதாகைகளை கொண்டு வருவது இல்லை.
அவையின் மையப்பகுதிக்குள் வந்து அமளியில் ஈடுபடுவது என தீர்மானித்தோம். உறுப்பினர்களின் அவசியமற்ற நடத்தைகளையும் அவை இடையூறு செய்யப்படுவதையும் நாட்டு மக்கள் விரும்புவது இல்லை என்று நாம் அனைவரும் அறிவோம்" என்று கூறியுள்ளார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications