Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி இங்கே வந்தாகனும்.. “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் ஆவேசம்! அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேச வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் இந்த வாரம் வியாழக்கிழமை வரை அமளி துமளியில் செயல்பட முடியாமல் முடங்கி இருக்கிறது. உலகையே உலுக்கிய மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசாமல் இருப்பதே இதற்கு காரணம்.

Loksabha adjourned till 2 pm due to opposition mps demand on PM Modi address regarding manipur issue

இதனை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த வாரம் வியாழன், வெள்ளி என 2 நாட்களும் கூச்சல் குழப்பத்தால் செயல்படாத நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை வார விடுமுறை முடிந்து மீண்டும் தொடங்கின. அன்றைய தினம் காலையிலேயே எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் காந்தி சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டன.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் முன்னிலையில் பேச வேண்டும் என இந்தியா வலியுறுத்துவதாக கூறி அவர்கள் முழக்கமிட்டனர். அன்றைய தினம் நாடாளுமன்ற மக்களவைக்கே உள்ளேயும், இந்தியா கூட்டணி எம்பிக்கள் மணிப்பூர் விவகாரம் தொடர்ந்து தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக லோக் சபாவில் விவாதிக்கலாம் என்று தெரிவித்தும், பிரதமர் மோடி அது பற்றி விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். மாநிலங்களவையிலும் இதே நிலையே நீடித்தது.

தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்பி ரஜானி பாட்டில் ஆகியோர் இதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை கண்டித்தும் எம்பிக்கள் இரவு விடிய விடிய நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்றே செவ்வாய்கிழமை அவை நடவடிக்கைகளும் முடங்கின.

பிரதமர் நரேந்திர மோடி அவை நடவடிக்கைகளிலும் கலந்துகொள்ளாத நிலையில், நேற்று மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை அளித்தனர். காங்கிரஸ், திமுக, திரிணாமூல், ஆம் ஆத்மி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் இதற்கு ஆதரவளித்து உள்ளன.

50 எம்பிக்களுக்கும் மேல் ஆதரவு இருந்ததால் அந்த நோட்டீசை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா, இது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து தேதி அறிவிக்கப்படும் என்றார். இந்த நிலையில் இன்றும் நாடாளுமன்றம் கூடியவுடன் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பேச வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மதியம் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+