அடித்து ஆடும் "இந்தியா" கூட்டணி... 2 மாநில முக்கிய கட்சிகளை இழுத்து வரப் போகிறாராம் நிதிஷ்குமார்!
டெல்லி: "இந்தியா" கூட்டணியில் ஏற்கனவே 28 கட்சிகள் இணைந்துள்ள நிலையில் மேலும் 2 முக்கியமான மாநில கட்சிகளை இழுப்பதற்கான நடவடிக்கைகளில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இறங்கி இருக்கிறார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
லோக்சபா தேர்தலுக்காக பிரதான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. "இந்தியா" கூட்டணியின் ஆலோசனை கூட்டங்கள் பாட்னா, பெங்களூர், மும்பையில் நடைபெற்று முடிவடைந்துள்ளன.
இந்தியா கூட்டணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் ம.பி.யில் 4-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக டெல்லியிலும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.
இதனிடையே "இந்தியா" கூட்டணியில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் 2 பிரதான கட்சிகளையும் இணைக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலி தளம் கட்சி நீண்ட காலமாக பாஜகவின் கூட்டணி கட்சியாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் பரம எதிரியாக இருந்து வரும் கட்சி. தற்போது பாஜகவுடனான கூட்டணியிலும் இல்லை. 1984 சீக்கியர் படுகொலை உள்ளிட்டவைகளால் காங்கிரஸுடன் இணைவதில் அகாலிதளத்துக்கு தயக்கம் இருக்கிறது. இதனை உடைத்து அகாலி தளத்தை "இந்தியா" கூட்டணியில் இழுத்துவிட பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.

இதேபோல ஹரியானாவில் முன்னாள் துணை பிரதமர் தேவி லால் பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இப்பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் சார்பாக உத்தவ் தாக்கரே, சரத்பவார், நிதிஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து அகாலி தளம், இந்திய தேசிய லோக் தளம் இரு கட்சிகளும் விரைவில் அதிகாரப்பூர்வமாக "இந்தியா" கூட்டணியில் இணையும் எனவும் கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications