திடீரென குலுங்கிய பூமி.. லாயல்டி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை
டெல்லி: பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள லாயல்டி தீவு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 7.1 என இந்த நிலநடுக்கம் பதிவான நிலையில் அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
பசிபிக் பெருங்கடலின் ஓர் அங்கமாக நியூ கலிடோனியா தீவுகள் உள்ளன. இது மூன்று நிர்வாக பிரிவாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நேற்று நியூ கலிடோனியா தீவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து நியூ கலிடோனியாவில் பிஜூ, வானட்டுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் தான் நியூ கலிடோனியாவின் கிராண்டே டெர்வேவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள லாயல்டி தீவில் 2 வது நாளாக இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இது முந்தைய நிலநடுக்கத்தை காட்டிலும் சக்தி குறைந்ததாக உள்ளது.
மேலும் லாயல்டி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அந்த நிறுவனம், ‛‛லாயல்டி தீவில் 2வது நாளாக 2வது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை இல்லை. இந்த நிலநடுக்கம் அங்குள்ள கடிகாரத்தின் அடிப்படையில் மதியம் 2 மணிக்கு பதிவானது. 45 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலை கொண்டு இருந்தது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications