பட்ஜெட் நாளில் சர்ப்ரைஸ்.. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு.. ரேட் என்ன? விவரம்!
டெல்லி: சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான்ன சிலிண்டர் விலையானது ரூ.6.50 குறைந்து ரூ.1959.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.818.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியவில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகின்றன. இந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதன்படி வீட்டுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் ரூபாய் 6.50 குறைந்துள்ளது. இதன்படி வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூபாய் 1,959.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டுக்கு பயன்படுத்தப்படும் 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையானது எந்த வித மாறுபாடும் இன்றி ரூபாய் 818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், வணிக சிலிண்டர் விலை குறைந்து இருப்பது வணிகர்களுக்கு மகிழ்ச்சியினை கொடுத்துள்ளது.
முன்னதாக கடந்த நவம்பர் மாதம் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்ந்து ரூ.1,964.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஜனவரி மாதத்தில் புத்தாண்டு பரிசு போல வணிக சிலிண்டர் விலையை ரூ.14.50-க்கு குறைத்து ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டரில் கடந்த சில மாதங்களாகவே எந்த விலை மாற்றமும் இன்றி ரூ 818.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications