கேஸ் சிலிண்டர் விலை உயர்வு.. சென்னையில் இனி மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ. 620
டெல்லி: சமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. இதனால் இனி சென்னையில் மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ 620-க்கு விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கேஸ் சிலிண்டரின் விலையை மாதம் ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் ஆரம்கோ எண்ணெய் வயலில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு சர்வதேச சந்தையில் சவுதி அரேபியா அரசின் கச்சா எண்ணெய் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.

டீசல் விலை
இதனால் பெட்ரோலிய பொருட்களும் முன்பு போல் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் தற்போது கேஸ் சிலிண்டரின் விலையும் உயர்ந்துள்ளது.

சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை
அக்டோபர் மாதத்துக்கான கேஸ் சிலிண்டரின் விலை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முந்தைய மாதத்தை காட்டிலும் விலை அதிகமாகவே உயர்ந்திருக்கிறது. சென்னையில் கடந்த மாதம் மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ606.50-க்கு விற்பனையானது.

கேஸ் சிலிண்டர்
சிலிண்டருக்கு ரூ.13.50 அதிகரித்துள்ளது. இதனால் தற்போது அது ரூ 620-ஆக உயர்ந்திருக்கிறது. கமர்சியலுக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை கடந்த மாதம் ரூ.1,174.50-ஆக இருந்தது. தற்போது அது ரூ.24.50-ஆக உயர்ந்துள்ளது.

வாடிக்கையாளர் கணக்கு
இனி வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,199 ஆகும். சென்னையில் கடந்த மாதம் மானியத்துடன் கூடிய சிலிண்டரின் விலை ரூ. 693.69-க்கும் விற்பனையானது. மானியமாக வாடிக்கையாளர் கணக்கில் ரூ. 87.19 செலுத்தப்பட்டது. இனி ரூ100.69 வரவு வைக்கப்படும்.

விற்பனை
டெல்லியில் மானியமில்லா சிலிண்டர் ரூ. 590, கொல்கத்தாவில் ரூ 616.50, மும்பையில் ரூ 562 ஆகிய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது அவை முறையே ரூ,15, ரூ,13.50, ரூ.12.50 ஆகிய விலைக்கு உயர்த்தப்பட்டு வருகிறது.
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications