சமையல் கேஸ் சிலிண்டர் வேணுமா.. மத்திய அரசின் இலவச சிலிண்டர் பெறுவது எப்படி தெரியுமா? 5 நிமிஷம் போதும்
டெல்லி: மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச கேஸ் சிலிண்டரை எப்படி விண்ணப்பித்து, பெற வேண்டும் தெரியுமா?
"பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா" என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியால் உத்தரபிரதேசத்தின் பல்லியாவில் மே 1, 2016 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
யோஜனா: நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் "பிரதமரின் உஜ்வாலா யோஜனா" திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும்.

பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது.. இது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் முதல் சமூக நலத் திட்டமாகும். சேமிப்புக் கணக்குகளைத் திறப்பதற்கான ஜன்தன் யோஜனா , சுகன்யா சம்ரிதி கணக்குகள் போன்ற மற்ற அனைத்துத் திட்டங்களும் இன்றுவரை உள்ளன..
வறுமைக்கோடு: வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்புகள் வழங்கப்படுவதால், இது நமது சமூகத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு அவர்களின் ஆரோக்கியத்தையும் அவர்களது குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். கூடுதலாக, இது இந்த பெண்கள் விறகு, சாணம் மற்றும் பிற சமையல் எரிபொருளுக்காக செலவிடும் நேரத்தை குறைக்க உதவும்.. அத்துடன், உஜ்வாலா யோஜனா கிராமப்புற இளைஞர்களுக்கு சமையல் எரிவாயு கிராமப்புற விநியோகச் சங்கிலியில் கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடியதுமாகும்
இந்த ஆதாரங்கள் கட்டாயம் தேவை:
- ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை
- சேமிப்பு கணக்கு பாஸ்புக் அல்லது வங்கி கணக்கு அறிக்கை
- இருப்பிட சான்று (தொலைபேசி/ மின்சாரம்/ தண்ணீர் அல்லது தொலைபேசி கட்டணம்/வீடு பதிவு ஆவணம்)
- பிபிஎல் (வறுமைக் கோட்டிற்கு கீழே) ரேஷன் கார்டு
- பஞ்சாயத்து பிரதானால் அங்கீகரிக்கப்பட்ட பிபிஎல் சான்றிதழ்
- சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
எப்படி விண்ணப்பிப்பது:
* https://www.pmuy.gov.in/index.aspx இணையதளத்துக்கு செல்லவும்.
* அதில் Indane, Bharatgas, Hindustan Petroleum ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சிலிண்டர் சேவையை தேர்வு செய்யவும்.
* எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்யவும்.
* விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பின் உங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்குவதற்கான பணி தொடங்கும்
தகுதிகள்: பெண்களே இந்த திட்டத்தின் பயனாளிகள் என்பதால் இதற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அவரும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பெயரில் இதற்கு முன்பு எல்பிஜி கணக்கு ஏதும் இருக்க கூடாது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பிறகு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தகுதியான நபர்களுக்கு சிலிண்டர் இணைப்புகளை வழங்கும்.
விண்ணப்பதாரரின் பெயர் SECC-2011 பட்டியலில் இருக்க வேண்டும் மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் BPL தரவுத்தளத்தில் வழங்கப்பட்ட தகவலுடன் பொருந்த வேண்டும். விண்ணப்பதாரர் அரசாங்கத்தால் வழங்கப்படும் வேறு எந்த திட்டத்திலும் பதிவு செய்யக்கூடாது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications