Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LPG Gas Cylinder Shortage LIVE:சிலிண்டர் முன்பதிவு கால இடைவெளி 45 நாட்களாக அதிகரித்த மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஈரான் போர் மற்றும் மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் காரணமாக இந்தியாவுக்கான கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால் கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நமக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய், கேஸ் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நம் நாட்டின் தேவையில் 85 - 90 சதவீத எல்பிஜி கேஸ் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து வரும் நிலையில் அது தடைப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நிலவும் கேஸ் தட்டுப்பாடு தொடர்பாக அடுத்தடுத்து வரும் அப்டேட்டுகளை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

LPG Gas Cylinder Shortage
LPG Gas Cylinder Shortage
LPG Gas Cylinder Shortage
LPG Gas Cylinder Shortage

Mar 12, 2026, 9:17 pm IST

மதுரையில் கேஸ் சிலிண்டர்கள் பதுக்கல்: 2 பேர் குண்டாஸ் சட்டத்தில் கைது!

மதுரை அருகே கோவில்பாப்பகுடி அருகே கள்ளச்சந்தையில் விற்பதற்காக கேஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்த இரண்டு பேர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 60க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதல் முறையாக கேஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்தவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Mar 12, 2026, 8:33 pm IST

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது 42வது அலை தாக்குதலை தொடங்கியது ஈரான்
Mar 12, 2026, 8:33 pm IST

அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் தொடரும் என்று ஈரானின் புதிய தலைவர் அறிவித்திருந்தார்
Mar 12, 2026, 8:33 pm IST

புதிய தலைவரின் அறிவிப்பு வந்த சில நிமிடங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது
Mar 12, 2026, 7:53 pm IST

கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் சிலிண்டர் முன்பதிவு கால இடைவெளி 25 நாட்களில் இருந்து 45 நாட்களாக அதிகரித்து மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் சுஜாதா சர்மா இன்று அறிவித்துள்ளார்.
Mar 12, 2026, 3:51 pm IST

உங்களின் ஒவ்வொரு நகர்விலும் நாங்கள் இருக்கிறோம். நாடு முழுவதும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்குகள் வழக்கம்போல் இயங்குகின்றன. இதனால் தேவையற்ற அவசரத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் – இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவிப்பு
Mar 12, 2026, 3:09 pm IST

போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் யாரும் அச்சப்படேவா, பதற்றம் கொள்ளவோ வேண்டாம். இந்த நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு துணை நின்று மேற்காசிய போர்ச்சூழலை எதிர்கொள்வோம் – முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் பதிவு
Mar 12, 2026, 2:53 pm IST

எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பெண் எம்பிக்கள் தலைமையில் பிற எம்பிக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி இந்த தர்ணாவில் ஈடுபுட்டார். அப்போது பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்டனர்.
Mar 12, 2026, 1:55 pm IST

பொதுமக்கள் அச்சப்படவோ, பதற்றம் கொள்ளவோ வேண்டாம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Mar 12, 2026, 1:55 pm IST

போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது - ஸ்டாலின்
Mar 12, 2026, 1:55 pm IST

அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசியப் போர்ச்சூழலை எதிர்கொள்வோம் - ஸ்டாலின்
Mar 12, 2026, 1:44 pm IST

எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பெண் எம்பிக்கள் தலைமையில் பிற எம்பிக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி இந்த தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்டனர்.
Mar 12, 2026, 1:04 pm IST

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு கேஒய்சி அப்டேட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
Mar 12, 2026, 12:00 pm IST

ஈரான் அனுமதியை தொடர்ந்து முதற்கட்டமாக ஹார்முஸ் ஜலசந்தியை இந்திய எண்ணெய் கப்பல்களான ‘புஷ்பக்’ மற்றும் ‘பரிமல்’ ஆகியவை பாதுகாப்பாக கடந்துள்ளன.
Mar 12, 2026, 12:00 pm IST

21 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் கையிருப்பு உள்ளது - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க தலைவர்

எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் சீராக உள்ளது

பொதுமக்கள் அச்சத்தில் அதிகளவில் பெட்ரோல் வாங்கிச் செல்வதால் மட்டுமே செயற்கையான தட்டுப்பாடு ஏற்படும்

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் முரளி விளக்கம்
Mar 12, 2026, 11:57 am IST

சவுதி, கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளிடம் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய் – கேஸ் சப்ளை வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நாட்டில் நிலவும் கச்சா எண்ணெய் – கேஸ் தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளது.
Mar 12, 2026, 11:56 am IST

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சியும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Mar 12, 2026, 11:19 am IST

அமெரிக்கா – இஸ்ரேலின் போர் காரணமாக ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இந்நிலையில் தான் ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி வழங்கி உள்ளது.
Mar 10, 2026, 10:15 pm IST

அம்மா உணவகங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை

தற்போது வரை சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை. போதிய சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன. இது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி போதிய இருப்பை வைக்க அறிவுறுத்தப்பட உள்ளது. அதேபோல், சென்னையில் எல்பிஜி மூலம் இயங்கும் மின் மயானங்களில் எரிவாயு தட்டுப்பாடு தற்போது வரை இல்லை. வரும் நாட்களில் பிரச்னை எழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
Mar 10, 2026, 9:54 pm IST

வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக, நாளை முதல் இட்லி, தோசை எல்லாம் கிடைக்காது.. 90 சதவீதம் மெனுக்கள் குறைக்கப்படும்.. ஹோட்டல்கள் 100 சதவீதம் மூடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.. 50 சதவீத கேஸ் கொடுத்தால் மட்டும் தான் இந்த தொழிலை தொடர்ந்து நடத்த முடியும் என்று சென்னை ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் ரவி கூறியுள்ளார்.
Mar 10, 2026, 9:45 pm IST

எல்பிஜி மையங்களில் எரிவாயு தட்டுப்பாடு?

சென்னையில் எல்பிஜி நிரப்பும் மையங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் எல்பிஜி மூலமாக இயங்கும் ஆட்டோக்களில் எரிவாயு நிரப்புவதற்காக பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் ஆட்டோ ஓட்டுனர்கள் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Mar 10, 2026, 9:36 pm IST

இட்லி, தோசை கிடைக்காது

நாளை முதல் இட்லி, தோசைலாம் கிடைக்காது.. 90 சதவீதம் மெனுக்கள் குறைக்கப்படும்.. ஹோட்டல்கள் 100 சதவீதம் மூடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.. 50 சதவீத கேஸ் கொடுத்தால் மட்டும் தான் இந்த தொழிலை தொடர்ந்து நடத்த முடியும் என்று சென்னை ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் ரவி பேட்டியளித்துள்ளார்.
Mar 10, 2026, 9:34 pm IST

சிலிண்டர் தட்டுப்பாடு என்பது பொய்

சிலிண்டர் தட்டுப்பாடு என்பது பொய்.. ஓட்டலில் உணவு வகைகளை குறைத்ததற்கும், சிலிண்டர் தட்டுப்பாடுக்கும் எந்த சம்பந்தம் கிடையாது. இந்தியாவில் பொருளாதார கட்டுப்பாடு, நெருக்கடி கிடையாது. கச்சா எண்ணெய் விலை கூடிய போதும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கூட்டப்படவில்லை- நயினார் நாகேந்திரன்
Mar 10, 2026, 8:43 pm IST

சிலிண்டர்கள் தட்டுப்பாட்டை குறைத்து தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எந்தவித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.
Mar 10, 2026, 8:23 pm IST

விறகு அடுப்பிற்கு மாறும் ஓட்டல்கள்

கள்ளக்குறிச்சியில் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் விறகு அடுப்பினை பயன்படுத்த தொடங்கியுள்ளன. வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடுகள் காரணமாக ஓட்டல்களை மூடும் நிலைமை உள்ளதாக ஓட்டல் நிர்வாகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
Mar 10, 2026, 8:10 pm IST

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவையில் உள்ள ஸ்ரீஅன்னபூர்ணா உணவகத்தில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளது. அன்னபூர்ணா உணவகங்களுக்கு நாள்தோறும் 200 எல்பிஜி சிலிண்டர்கள் தேவைப்படுகிறது என்று நிர்வாக இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Mar 10, 2026, 7:33 pm IST

நாட்டில் உள்ள மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய வீட்டு உபயோகமற்ற துறைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்கள் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை
Mar 10, 2026, 6:18 pm IST

கேஸ் தட்டுப்பாடு பிரச்சனையை போக்க பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் பிரதமர் மோடி கேஸ் தட்டுப்பாட்டை சரிசெய்வது பற்றி விரிவாக விவாதித்தார்.
Mar 10, 2026, 5:24 pm IST

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை (Essencial commodities act ) சட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன்மூலம் நம் நாட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் கேஸ் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Mar 10, 2026, 5:22 pm IST

கோவையின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மெனு பட்டிலை குறைப்பதாக அறிவித்துள்ளது. எல்பிஜி சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் அத்தியாவசிய உணவு பொருட்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளோம் என்னபூர்ணா ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+