கும்பல் வன்முறைக்கு எதிராக குற்றவியல் சட்டத்தில் திருத்தம்.. நாடாளுமன்றத்தில் அமித் ஷா அதிரடி பதில்
டெல்லி: நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக குற்றவியல் நடைமுறை சட்டத்தை திருத்த அரசு உத்தேசித்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பதில் அளித்தார்.
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கும்பல் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.
குழந்தை கடத்த வந்ததாக வதந்திகள் பரவியதால் சில ஆண்டுக்கு முன்பு நாட்டின் பல்வேறு இடங்களில் கும்பலாக சேர்ந்து பலரை மக்கள் கடுமையாக தாக்கினர். இதில் அப்பாவிகள் அடித்தே கொல்லப்பட்டனர்.

கடும் நடவடிக்கை
இதேபோல் பசுவை கடத்தி செல்வதாக வதந்தி பரவிய காரணத்தாலும் பலர் கும்பல்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறியது. மேற்கண்ட கொடூர சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் இச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி வருகிறது.

கும்பல் வன்முறை
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி நசிர் ஹுசைன், இந்த கும்பல் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் ராஜ்யசாவில் இன்று கேள்வி எழுப்பினார். அவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏராளமான கும்பல் வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்துள்ளது. இது குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்று கேட்டார்.

சட்ட நடவடிக்கை
இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, "கும்பல் வன்முறை பிரச்சினையை சமாளிக்க மற்றும் பரிந்துரைகளை அளிக்க, மத்திய அரசு அமைச்சர்கள் குழுவை உருவாக்கியுள்ளது, அவர்கள் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளனர், இந்த விஷயத்தை அரசு அறிந்துள்ளது. இதுபோன்ற வழக்குகளில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 300 மற்றும் 302 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சட்டத்தில் திருத்தம்
கும்பல் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளோம். அத்துடன் நாங்கள் கும்பல் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications