என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை- எம் ஜே அக்பர்
டெல்லி: என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என மத்திய வெளியுறவு துறை இணையமைச்சர் எம் ஜே அக்பர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. அதன்படி மத்திய அமைச்சர் எம் ஜே அக்பர் மீதும் அமெரிக்காவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார்.

அந்த பெண் இன்டர்ன்ஷிப் பயிற்சி செய்த பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக வேறு ஒரு பத்திரிகைக்கு மெயில் அனுப்பியுள்ளார். இதுபோல் 10-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் அக்பர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே அரசு முறை பயணமாக வெளிநாட்டு சென்றுவிட்டு இன்று திரும்பிய அக்பர் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில் பாலியல் புகார் குறித்து விரிவான விளக்கம் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. சித்தரிக்கப்பட்டவை., புனையப்பட்டவை ஆகும்.
குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறேன். எனவே புகார்தாரர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் குற்றச்சாட்டின் போது வெளிநாட்டில் இருந்ததால் உடனடியாக பதில் அளிக்க முடியவில்லை.
பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த புயல் எழுந்தது ஏன். எனது நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் வகையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்றார் அக்பர். இதனிடையே அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈமெயில் மூலம் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல்கள் எழுந்தன.
இது குறித்து அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை. மேலும் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அவர் சந்திப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுவரை அவர் சந்திக்கவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications