இந்திய தேசியக் கொடியில் 'Made in China' டேக் - காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் சர்ச்சை!
டெல்லி : கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் இடம்பெற்ற இந்திய தேசியக் கொடியில் 'Made in China' என்ற டேக் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட இந்தியாவின் தேசியக் கொடியை சீனாவில் தயாரித்து வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் தேசியக்கொடி பயன்படுத்தப்பட்டதால் அதிர்ச்சியடைந்த சபாநாயகர்கள், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் முறையிட்டுள்ளனர்.

காமன்வெல்த் மாநாடு
கனடாவில் உள்ள ஹாலிஃபாக்ஸ் நகரத்தில் சபாநாயகர்களுக்கான 65வது காமன்வெல்த் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் சபாநாயகர்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சபாநாயகர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

மேட் இன் சைனா
காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் கையில் தேசியக் கொடி ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர். அந்த தேசியக்கொடிகளில் 'மேட் இன் சைனா' என எழுதப்பட்டிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

சீன தயாரிப்பு
இந்திய தேசியக்கொடியில், 100% பாலியஸ்டர் என்ற வாசகத்திற்குக் கீழ், மேட் இன் சைனா என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசியக்கொடியை சீனாவில் தயாரித்துப் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை
இந்திய தேசியக் கொடியில், 'மேட் இன் இந்தியா' டேக் இடம்பெற்றிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாநில சபாநாயகர்கள் இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், இதுவரை அரசு தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் தரப்படவில்லை.












Click it and Unblock the Notifications