கிரானைட் வழக்கு: அழகிரி மகனுக்கு நெருக்கடி! அமலாக்கப் பிரிவு சார்பாக சீனியர் வக்கீல் ஆஜராகிறார்!
டெல்லி: சட்டவிரோத கிரானைட் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி தமக்கு அனுப்பப்பட்ட சிபிஐ சம்மனை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது அமலாக்கப் பிரிவு பதிலளிக்க 2 வார கால அவகாசம் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
மதுரையை அடுத்த மேலூர் கீழவளவு பகுதியில் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததால் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அழகிரி மகன் துரை தயாநிதி உளிட்டோர் மீது 2013-ல் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் துரை தயாநிதி அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

அதேநேரத்தில் இதில் பண மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நிகழ்ந்ததாக அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடந்தது. இவ்வழக்கில் துரை தயாநிதி அழகிரி மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகவும் சம்மன் அனுப்பியது அமலாக்கப் பிரிவு. ஆனால் இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார் தயாநிதி அழகிரி. அவரது இம்மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. அத்துடன் வழக்கு விசாரணைக்கு தயாநிதி ஒத்துழைக்க வேண்டும்; விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்க வேண்டும் எனவும் சிபிஐ நீதிமன்றத்துக்கும் உத்தரவிடப்பட்டது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தயாநிதி அழகிரி தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த பின்னணியில் இவ்வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஸ் மகேஸ்வரி தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது.
இன்றைய விசாரணையின் போதும் அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்படவில்லை. இதனை தயாநிதி அழகிரி தரப்பு சுட்டிக்காட்டியது. ஆனால் அமலாக்கப் பிரிவு வழக்கறிஞரோ, மூத்த வழக்கறிஞர் இவ்வழக்கில் ஆஜராகிறார்; அதனால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றார். இதனை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கப் பிரிவு பதிலளிக்க 2 வாரம் அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications