டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல், மமதா, மாயாவதி.. எதிர்க்கட்சிகளின் மெகா லோக் சபா கூட்டணி.. பிரதமர் வேட்பாளர் யார்?

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலுக்காக உருவாக்க போகும் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் ? எதிர்க்கட்சிகள் இன்று சந்திப்பு !

    டெல்லி: எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலுக்காக உருவாக்க போகும் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    இன்று டெல்லியில் எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்த பாஜகவிற்கு எதிராக மாபெரும் கூட்டணி அமைக்க உள்ளது. இதில் 2019 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்க இருக்கிறார்கள்.

    இந்த ஆலோசனையில் 90 சதவிகித எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள உள்ளது. இதனால் இந்த சந்திப்பு பெரிய கவனம் பெற்று உள்ளது.

    பிரதமர் வேட்பாளர்

    பிரதமர் வேட்பாளர்

    கூட்டணி குறித்த ஆலோசனைக்கு மத்தியில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்றும் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. பிரதமர் ரேஸில் இருக்கும் தலைவர்கள் குறித்து இவர்கள் விவாதம் நடத்தவும், தலைவர் ஒருவரை தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளது.

    பெரிய ரேஸ்

    பெரிய ரேஸ்

    இந்த கூட்டணியின் தலைவரா தகுதி இருக்கும் நபர்கள் என்று 6 பெயர்கள் விவாதத்தில் வைக்கப்படுகிறது. ராகுல் காந்தி, மாயாவதி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் ஆகிய 6 பேரில் ஒருவர்தான் இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முடியும் என்று விவாதம் செய்யப்படுகிறது. இதில் யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்விதான் தற்போது எழுந்துள்ளது.

    ராகுலா?

    ராகுலா?

    இதில் பலர் பொதுவாக முணுமுணுக்கும் பெயர் ராகுல் காந்திதான். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் இங்கு மாநில தலைவர் என்ற அடையாளம் இல்லாமல் தனித்து இருக்கிறார். மற்ற தலைவர்கள் எல்லோரும் முன்னாள் இந்நாள் மாநில முதல்வர்கள். இதனால் தேசிய அடையாளம் கொண்ட, தேசிய கட்சியின் தலைவரே பிரதமர் வேட்பாளர் ஆவது சரி என்று இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனாலும் சிலர்

    ஆனாலும் சிலர்

    ஆனாலும் இந்த ரேஸில் சில முக்கிய தலைவர்கள் பிரச்சனை செய்யவோ, இல்லை பிரதமர் வேட்பாளர் பதவியை கேட்கவோ ஆசை படலாம் என்று கூறப்படுகிறது. மமதா பானர்ஜி, மாயாவதி ஆகிய இருவரும் ஏற்கனவே பிரதமர் கனவில் இருக்கிறார்கள். இவர்களுக்கும் ராகுலுக்கும் உறவு அத்தனை நல்லபடியாக இல்லை. இதனால் இன்று இவர்கள் எதாவது பிரச்சனை செய்யவும் வாய்ப்புள்ளது.

    தெரிய வாய்ப்பு

    தெரிய வாய்ப்பு

    அதனால் 2019 தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி களமிறக்க போகும் அந்த வேட்பாளர் யார் என்று இன்று தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது . சமயங்களில் அப்படி வேட்பாளர் பெயர் எதையும் அறிவிக்காமலேயே கூட தேர்தலை சந்திக்க எதிர்கட்சிகள் முடிவெடுக்க வாய்ப்பு இருக்கிறது. எந்த முடிவாக இருந்தாலும் இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

    English summary
    Mahagathbandhan Meet: Who will lead the opposition alliance? today's meet will decide everything.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X