ராகுலை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பொறுப்பிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்!
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி அடைந்ததால் ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து பல முக்கிய நிர்வாகிகளும்ம் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலகி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி கடந்த 2014 தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் படு தோல்வி அடைந்துள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் தவிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அறிவித்தார். ஆனால் செயற்குழு அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை.

பல முக்கியத்தலைவர்களும் அவரை சந்தித்து சமாதானப்படுத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு இடைக்கால தலைவராக மோதிலால் வோரா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ராகுளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலக தொடங்கியுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் காரியக் கமிட்டிகள் கலைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று காலை மும்பை காங்கிரஸ் கட்சி தலைவர் மிலிந்த் தியோரா தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்குப் பின்னர் பேசிய அவர் "தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் மேம்பாட்டிற்கு தான் முழு ஒத்துழைப்பை வழங்குவேன். மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அரசியல் நிலைப்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தக்க சமயம் வரும் போது, உரிய பதவிகளைப் பெற நாங்கள் தயாராக இருப்போம்" என்று கூறினார்.
மிலிந்த் தியோராவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் முக்கியமானவரான ஜோதிராதித்ய சிந்தியா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ராகுலிடம் வழங்கிய அவர் "மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தோல்விக்கு பொறுப்பை ஏற்கிறேன்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை ராகுல் காந்தியிடம் சமர்ப்பித்தேன். இந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காகவும், எங்கள் கட்சிக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்தமைக்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறினார் ஜோதிராதித்ய சிந்தியா.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications