டெல்லி ஹாட் சந்தையில் மிக பெரிய தீவிபத்து! சம்பவ இடத்திற்கு விரைந்த 13 தீயணைப்பு வாகனங்கள்!
டெல்லி: தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள புகழ்பெற்ற டில்லி ஹாட் சந்தையில் இன்றிரவு மிக பெரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் 13 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. நல்வாய்ப்பாக இந்தத் தீவிபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு டெல்லி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சந்தை டில்லி ஹாட் சந்தை.. தினசரி பல நூறு பேர் இந்தச் சந்தைக்குச் செல்வார்கள். இதற்கிடையே இந்தச் சந்தையில் எதிர்பாராத விதமாகத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இரவு 9 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் 13 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. நல்வாய்ப்பாக தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், தீ விபத்தால் பல கடைகள் சேதம் அடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதில் சுமார் 25- 30 கடைகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீயை அமைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் அந்த இடம் முழுக்க புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications