98-114 இடங்களுடன் ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்கும் பாஜக.. வெளியான 10 கணிப்புகளின் முழு விவரம்
டெல்லி : ராஜஸ்தானில் வெளியான 10 கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜகவே வெல்லும் என்று கூறியுள்ளன. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, பாஜக 98 முதல் 114 இடங்களில் வெல்லும் என்றும், காங்கிரஸ் 75 முதல் 91 இடங்கள் வரை வெல்லும் என்றும் எக்ஸிட் போல் கணிப்பில் தெரிகிறது.
ராஜஸ்தானில் தற்போது முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி கடந்த ஐந்து வருடங்களாக ஆட்சி செய்து வருகிறது. ராஜஸ்தானை மாநிலத்தை பொறுத்தவரைக் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் எப்போதுமே நேரடி போட்டி நிலவி வருகிறது நம்மூரில் உள்ள அதிமுக திமுக போல், அங்கு பாஜகவும் காங்கிரஸ் கட்சிகளும் ஆட்சி செய்து வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக 199 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்தததால் ஒத்திவைக்கப்பட்டது. ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 75% வாக்குகள் பதிவானது. ராஜஸ்தான் மாநிலத்தில் இவ்வளவு அதிகமான வாக்குகள் பதிவானது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐந்து வருடங்கள் ஆண்ட கட்சி அடுத்த முறை ராஜஸ்தானில் மாறிவிடும். இதுதான் எதார்த்தமான ஒன்றாக ராஜஸ்தானில் காலம் காலமாக இருக்கிறது. இந்நிலையில் அதிகப்படியான வாக்கு சதவீதம் பதிவானதால் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என்று சொல்கிறார்கள்.
ஏனெனில் ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரைக் கடந்த காலங்களில் முந்தைய தேர்தலைக் காட்டிலும் குறைந்த வாக்குகள் பதிவான 7 தேர்தல்களில் ஆளும் தரப்பு மூன்று முறை ஆட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. அதேநேரம் முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிக வாக்குகள் பதிவான 7 தேர்தல்களில் ஒரே ஒரு முறை மட்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டன. ஆனால், இவை அனைத்தும் 1990களில் நடந்தவை. அதன் பிறகு எந்தவொரு கட்சியாலும் அங்கே ஆட்சியைத் தக்க வைக்க முடியவில்லை. மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.
இந்நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் இன்று நடந்து முடிந்த நிலையில், ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்புகளை பிரபல செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அந்த வகையில், ராஜஸ்தானில் ராஜஸ்தானில் வெளியான 10 கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலனவை பாஜகவே வெல்லும் என்று கூறியுள்ளன. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, பாஜக 98 முதல் 114 இடங்களில் வெல்லும் என்றும், காங்கிரஸ் 75 முதல் 91 இடங்கள் வரை வெல்லும் என்றும் எக்ஸிட் போல் கணிப்பில் தெரிகிறது.
ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 115-130 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்றும், , அதேநேரம் காங்கிரஸ் கட்சி 65-75 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. Peoples Pulse நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 95-115 இடங்களையும் காங்கிரஸ் 73-95 இடங்களையும் , மற்ற கட்சிகள் 5-12 இடங்களையும் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா டிவி சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 80-90 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு உள்ளது என்றும், காங்கிரஸ் கட்சி 94-104 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளது. ABP News-C Voter நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 94-114 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்றும் , காங்கிரஸ் கட்சி 71-91 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா ராஜஸ்தானில் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 95-115 இடங்களை வென்று ஆட்சியை பிடிக்கும் என்றும், காங்கிரஸ் 73-95 இடங்களையும் , மற்ற கட்சிகள் 5-12 இடங்களையும் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவி 9 -போலோரிஸ்ட் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 100-110 இடங்களை வென்று ஆட்சியை பிடிக்கும் என்றும், காங்கிரஸ் 90-100 இடங்களையும் , மற்ற கட்சிகள் 5-15 இடங்களையும் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்1 நவ் இடிஜி (Times Now ETG) நடத்திய தேர்தலுக்கு பின்பான கருத்துக்கணிப்பில் பாஜக 108-128 இடங்களை வென்று பிரம்மாண்டமாக ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்கும் என்றும், காங்கிரஸ் 56-72 இடங்களையும் , மற்ற கட்சிகள் 13-21 இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டானிக் பாஸ்கர் ராஜஸ்தானில் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 98-105 இடங்களை வெல்லும் என்றும், காங்கிரஸ் 85-95 இடங்களை வென்று கடும் சவாலை அளிக்கும் என்றும், மற்ற கட்சிகள் 10-15 இடங்களையும் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன் கி பாத் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 111 இடங்களையும் காங்கிரஸ் 74 இடங்களையும் , மற்ற கட்சிகள் 14 இடங்களையும் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பி-மார்க்யூ நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 105-125 இடங்களையும் காங்கிரஸ் 69-91 இடங்களையும் , மற்ற கட்சிகள் 5-15 இடங்களை பிடிக்கும் என கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications