டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒன்னா, ரெண்டா.. துறைவாரியா துடைச்சிட்டாங்க.. ராஜஸ்தானில் இத்தனை அமைச்சர்கள் மண்ணை கவ்வினர்

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் அம்மாநில அரசில் அங்கம் வகித்த அமைச்சர்கள் பலரும் தோல்வியடைந்துள்ளனர்.

ராஜஸ்தானில் வசுந்தராராஜே தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சி அமோகமாக முன்னேறி, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தொட்டுவிட்டது.

எதிர்ப்பு அலைக்கு நடுவேயும் வசுந்தரா ராஜே, தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அவரது அமைச்சரவை சகாக்களில் பலரும் தோல்வியை சந்தித்துள்ளனர்.

விவசாயத்துறை, விளையாட்டுத்துறை

விவசாயத்துறை, விளையாட்டுத்துறை

ராஜஸ்தான் மாநில விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்த பிரபு லால் சாயினி தோல்வியடைந்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் கிவ்சாரும், தோல்வியடைந்துள்ளார்.

சச்சின் பைலட் வெற்றி

சச்சின் பைலட் வெற்றி

பொதுப் பணித்துறை அமைச்சர் யூனுஷ் கான், தோல்வியடைந்துள்ளார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு எதிராக போட்டியிட்டு அவர் தோல்வியடைந்துள்ளார்.

வசுந்தராவிற்கு நெருக்கம்

வசுந்தராவிற்கு நெருக்கம்

அதேநேரம், வசுந்தராவின் நெருக்கமான அமைச்சரான கிரன் மகேஷ்வரி வெற்றி பெற்றுள்ளார். பாஜக முன்னாள் தேசிய பொதுச் செயலாளரான இவர், உயர் கல்வித்துறை அமைச்சராகும்.

இத்தனை அமைச்சர்கள்

இத்தனை அமைச்சர்கள்

ஆனால் அமைச்சர்கள் சுரேந்திர கோல், ராஜ்பால் சிங் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். இது மட்டுமா, ஹேம் சிங் பதானா, அஜய் கிலாக், பாபுலால் பைரவா, அமரா ராம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அருண் சதுர்வேதி ஆகியோரும் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளனர்.

English summary
Results of the Rajasthan Assembly elections are almost clear and the Congress is going to form the government in the state but the most interesting aspect of this election is that most of the ministers in the Vasundhara Raje government have lost their elections and some are still trailing. Some such ministers who were denied tickets but contested elections too lost.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X