வார இறுதியில் வேலை செய்ய மறுத்த ஊழியர்.. கோபமாகி ‛பாஸ்’ கூறிய வார்த்தை! யாருமே எதிர்பாராத ட்விஸ்ட்
டெல்லி: டெல்லியில் வாரயிறுதி நாட்களில் வேலை செய்ய முடியாது எனக்கூறிய ஊழியரை அந்த நிறுவனத்தின் ஓனர் கெட்டவார்த்தையில் திட்டி உள்ளார். இதையடுத்து அந்த ஊழியர் எடுத்து முடிவு குறித்து ரெடிட் வலைதள பக்கத்தில் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி உள்ளது.
ஒருநாளுக்கு தொழிலாளர், ஊழியர்களுக்கு 8 மணிநேர பணியை தான் ஒதுக்க வேண்டும். அதற்கு மீறி பணி கொடுக்கப்பட்டால் கூடுதல் சம்பளம், மாற்று விடுமுறை என்பது வழங்க வேண்டும். ஆனால் பல நிறுவனங்களில் இதனை பின்பற்றுவது இல்லை.

ஊழியர்கள், தொழிலாளர்களை 8 மணிநேரம் தாண்டி 12 மணிநேரம், ஏன் 15 மணிநேரம் கூட வேலை வாங்குகின்றனர். குறிப்பாக வார விடுமுறை, வார இறுதி நாட்களில் கூடுதல் நேரம் பணி செய்ய கூறும் வழக்கம் பல நிறுவனங்களில் நடைமுறையில் உள்ளது. இது ஊழியர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கும்.
இப்படியான சூழலில் தான் ரெடிட் வலைதள பக்கத்தில் பலரும் தங்களின் பணி அனுபவம், அலுவலகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிய பதிவுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது டெல்லியில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வீடியோ எடிட்டராக பணியாற்றி ஊழியர் தான் எதிர்கொண்ட பிரச்சனையை பகிர்ந்துள்ளார்.
அதாவது டெல்லியில் தனியாருக்கு சொந்தமான மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒருவர் வீடியோ எடிட்டராக பணிக்கு சேர்ந்தார். இவர் தான் தற்போது மனக்குமுறலை கூறியுள்ளார். இதுபற்றி அவர், ‛‛டெல்லியில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வீடியோ எடிட்டராக பணியாற்றினேன். இந்த நிறுவனத்தில் இன்ஸ்டாகிராமில் பணி சூழல் பற்றி நன்றாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் நம்பிபோய் அந்த நிறுவனத்தில் சேர்ந்தேன். ஆனால் நான் சேர்ந்த சில வாரங்களிலேயே பணி சூழல் என்பது மாற தொடங்கியது. சம்பவத்தன்று வீடியோ ஒன்றை 55 நிமிடத்தில் எடிட் செய்து அலுவலக நேரமான இரவு 7.30 மணிக்கு வழங்கினேன். ஆனால் இரவு 8.30 மணிக்கு சில மாற்றங்களை செய்யும்படி கூறினார்கள். நாளை மதியத்துக்குள் இது வேண்டும். அதனால் மாற்றம் செய்து தாருங்கள் என்று பாஸ் கூறினார்.
நான் ‛‛இப்போது பணி செய்தால் வாரஇறுதி நாட்களில் வேலைக்கு வரமாட்டேன். நான் எனது புராஜெக்ட் பைலை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறினேன். அதற்கு, ‛‛இது எந்த மாதிரியான F*****g பதில்?'' என்று பாஸ் கேட்டார். அதற்கு ஊழியர், நான் வீக்எண்ட்டில் பணி செய்ய மாட்டேன் என்று மீண்டும் பதிலளித்தார். அதற்கு பாஸ், "வாவ்.. வாவ்" என்று பதிலளித்தார். இந்த வார்த்தைகள் என்னை வேலையை விட்டு நிற்க வைத்துள்ளது என்று அந்த நபர் கூறியுள்ளார்.
இந்த பதிவில் அவரது பாஸுக்கும், ஊழியருக்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் சாட் தொடர்பான ஸ்கீரின்ஷாட் இணைக்கப்பட்டு இருந்து. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் வீடியோ எடிட்டருக்கு ஆதரவாகவும், அவரது பாஸுக்கு எதிராகவும் கருத்துகளை கூறி வருகின்றனர்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications