கொல்கத்தாவில் தரையிறங்கும் முன் தடுமாறிய மலேசியா விமானம்.. வானில் வட்டமடித்ததால் பதறிய பயணிகள்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: 159 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து கொல்கத்தா வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென தாமதம் ஆனது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, ​​லேசர் லைட் அடிக்கப்பட்டதன் காரணமாக விமானியின் கவனம் சிதறியதால், லேண்டிங் ஆகாமல் வானில் வட்டமடித்தது. இந்த நிகழ்வால் கொல்கத்தா விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மலேசியாவில் இருந்து 159 பயணிகளுடன் கொல்கத்தாவிற்கு மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இந்த விமானம் நேற்று இரவு 11.20 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிட்டு இருந்த நிலையில், திடீரென லேண்டிங்கை கைவிட்டு வானில் வட்டமடித்தது. இதனால், கொல்கத்தா விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Malaysia Airlines flight falters before landing in Kolkata passengers alarmed as plane circles overhead

லேசர் லைட் அடிக்கப்பட்டதாக..

பயணிகளுக்காக காத்திருந்த உறவினர்களும் சிறிது நேரம் பதற்றத்திற்கு உள்ளாகினர். இந்த சம்பவம் குறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது:- மலேசியாவில் இருந்து கொல்கத்தாவிற்கு எம்.ஹெச் 184 விமானம், கொல்கத்தா சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்தது. விமானம் 8 நாட்டிகல் மைல் தொலைவில் வந்து கொண்டு இருந்த போது, விமானத்தை நோக்கி லேசர் லைட் அடிக்கப்பட்டுள்ளது.

மத்யம்கிராம் - பராசைட் நகரில் இருந்து அதிக ஒளியுடன் கொண்ட லேசர் லைட் விமானத்தின் காக்பிட் நோக்கி அடிக்கப்பட்டதாக சொல்லபடுகிறது. இதனால், விமானியால் சரியாக பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டதால் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டதையடுத்து லேண்டிங்கை கைவிட்டு விமானம் வானில் வட்டமடித்தது. பிறகு உரிய அனுமதி பெற்று 11.25 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய அதிகாரி விளக்கம்

விமானத்தை நோக்கி லேசர் லைட் அடிக்கபட்ட நிகழ்வு குறித்து உடனடியாக மலேசியன் ஏர்லைன்ஸ் தரப்பில் விமான நிலைய அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. விமான நிலைய அதிகாரிகள் காவல் துறையில் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கொல்கத்தா விமான நிலைய இயக்குனர் விக்ரம்சிங் இதுபற்றி கூறுகையில், "விமான நிலைய பகுதி அருகே லேசர் லைட்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதனால் விமான சேவைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. போலீஸாரிடம் இதுபற்றி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்" என்று தெரிவித்தனர்.

முதல் முறையல்ல

கொல்கத்தாவில் இதுபோன்ற லேசர் லைட்கள் அடிக்கப்பட்டதாக புகார் எழுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2025 ஆம் ஆண்டு துர்கா பூஜா சமயத்தில் விமானங்களை நோக்கி லேசர் லைட் அடிக்கப்பட்டதாக விமானிகள் கவலை தெரிவித்து இருந்தனர். இதையடுத்து லேசர் லைட் ஷோ அப்போது தடுத்து நிறுத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் கொல்கத்தா விமான நிலையத்தில் கேட்டரிங் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இண்டிகோ விமானத்தின் மீது மோதியது. இந்த நிகழ்வும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+