"ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி.." ஆம் ஆத்மி பரபர குற்றச்சாட்டு! புது வீடியோவால் ட்விஸ்ட்
டெல்லி: டெல்லியில் ஸ்வாதி மாலிவால் விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது பாஜகவின் சதித்திட்டம் என்றும் ஸ்வாதி மாலிவால் சொல்வது 100% பொய் என்றும் ஆம் ஆத்மி விளக்கமளித்துள்ளார்.
ஆம் ஆத்மி எம்பியும் டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபர குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

அதாவது முதல்வர் இல்லத்தில் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக அவர் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக அவர் டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு புகாரும் அளித்துள்ளார்..
குற்றச்சாட்டு: பிபவ் குமார் தன்னை பல முறை அறைந்ததாகவும் வயிற்றிலேயே எட்டி உதைத்ததாக ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதற்கிடையே ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டிற்கு ஆம் ஆத்மி பதிலளித்துள்ளது. பொதுத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஆம் ஆத்மியை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து ஸ்வாதி இவ்வாறு செயல்படுவதாக ஆம் ஆத்மி பதிலளித்துள்ளது.
வீடியோ: இதற்கிடையே டெல்லி முதல்வர் அலுவலகத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 52 நொடிகள் ஓடும் ஸ்வாதி மாலிவாலின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஸ்வாதி மாவிவால் கெஜ்ரிவால் இல்லத்தில் பாதுகாப்பு ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார். அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் ஸ்வாதியை அங்கிருந்து வெளியேறுமாறு பல முறை சொல்கிறார்கள். இருப்பினும், அங்கிருந்து செல்ல மறுக்கும் ஸ்வாதி அவர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்.
தன்னை எதிர்த்தால் போலீஸ் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறுகிறார். மேலும் ஒரு கட்டத்தில் பாதுகாப்பு ஊழியர்களைத் தாக்கவும் முற்படுவது போலவே தெரிகிறது. இந்த வீடியோவை ஆம் ஆத்மி கட்சியினர் பகிர்ந்து வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில் பாஜகவே இருப்பதாகவும் சாடி வருகிறார்கள்..
அதிஷி பதில்: இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கெஜ்ரிவாலை குறிவைத்து பாஜக போட்ட திட்டங்களை இது அம்பலப்படுத்துகிறது.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்ததில் இருந்தே அவரை காலி செய்ய பாஜக சதித்திட்டத்தைத் தீட்டியது. இதன் காரணமாக ஸ்வாதி மாலிவால் மே 13 அன்று காலை அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
அங்கே ஒரு டிராமாவை நடத்தி முதல்வரை அவமதிக்க வேண்டும் என்பதே அவரது திட்டம். ஆனால், முதல்வர் கெஜ்ரிவால் இந்தச் சம்பவம் நடந்த போது அங்கு இல்லை.. இதனால் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜகவின் இந்த சதியின் முகமாக இருப்பவர் தான் ஸ்வாதி மாலிவால்" என்றார்.
முழுக்க முழுக்க பொய்: மேலும், சமூக வலைத்தளங்களில் பரவும் 52 நொடிகள் ஓடும் அந்த வீடியோவை குறிப்பிட்டு அதிஷி, "இந்த ஒரு வீடியோ போதும் ஸ்வாதி எந்தளவு பொய் சொல்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும்.. போலீசாரிடம் தான் தாக்கப்பட்டதாக ஸ்வாதி புகாரளித்தார். ஆனால், வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் அவர் வசதியாக உட்கார்ந்து அதிகாரிகளை அச்சுறுத்துவது தெளிவாகத் தெரிகிறது. அவர் பிபவ் குமாரையும் அதில் அச்சுறுத்துவது தெளிவாகத் தெரிகிறது.
தன்னை அடித்து உதைத்தாக எல்லாம் ஸ்வாதி கூறுகிறார். ஆனால், அவருடைய உடைகள் கிழிந்துவிடவில்லை, தலையில் காயம் கூட இல்லை. இதில் இருந்தே அவர் சொல்வது எந்தளவுக்குப் பொய் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications