ராம், ராம் என சொல்லிக்கொண்டு..கத்தியால் வெட்டுகிறீர்கள்! VB–G RAM G சட்டம் குறித்து கார்கே விமர்சனம்
டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு பதில், VB-G RAM G என்று புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த சட்டம் நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு மாநிலங்களவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
மாநிலங்களவையில் அவர் பேசியதாவது, "யூபிஏ ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தகுதியான கிராமப்புற குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை மூலம் வாழ்வாதாரத்தை வழங்கும் நோக்கத்தைக் கொண்டது. இந்தத் திட்டத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டுவந்தால், மக்கள் தங்கள் தலைவர்களை வீதிகளில் நடமாட விடமாட்டார்கள்.

இந்த புதிய சட்டம் மூலம், ஏழைகளை பலவீனப்படுத்தி, மீண்டும் அவர்களை அடிமைத்தனத்திற்கு தள்ள பாஜக முயற்சிக்கிறது. MGNREGA ஒரு மிக முக்கியமான சட்டம். அதை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இது ஏழைகளுடன் தொடர்புடைய சட்டம், இதில் தலையிடுவது நல்லதல்ல. பழைய சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டுவர நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சரியல்ல. மக்கள் உங்களை வீதிகளில் நடமாட அனுமதிக்க மாட்டார்கள்.
சாதாரண மக்களை, குறிப்பாக உழைக்க முடியாத ஏழைகளுக்கு உணவு வழங்க MGNREGA அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று நீங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளைப் பறிக்கிறீர்கள். இதற்குப் பின்னால் உங்கள் நோக்கம் என்ன? ஏழை மக்களை பலவீனப்படுத்துவது. அவர்களை நசுக்கி மீண்டும் அடிமைத்தனத்தில் தள்ளுவதுதானே?.
2021ல் மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை போல, இந்த புதிய மசோதாவையும் நீங்கள் திரும்பப் பெற வேண்டிய நேரம் மீண்டும் வரும். நாங்கள் வீதிகளுக்கு வருவோம். நாங்கள் துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்வோம், ஆனால் இந்தச் சட்டத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்.
MGNREGA திட்டத்தை அதன் பழைய வடிவத்திலேயே தொடர வேண்டும். அதை மேலும் பலப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து ஏழைகளும் அழிந்துவிடுவார்கள். பழைய திட்டம் கிராமப்புற குடும்பங்களின் வருமானத்தை அதிகரிப்பதிலும், வறுமை ஒழிப்பிலும் குறிப்பிடத்தக்க பாசிட்டிவான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன.
பழைய திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் ஏழைகளுக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம். அதைச் செய்யாதீர்கள். வாய் நிறைய ராம், அக்குளில் கத்தி என்பது போல, ஏழைகளுக்காக 'ராம், ராம்' என்று சொல்லிக்கொண்டே, கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு அவர்களை முன்புறம், பின்புறம், கழுத்திலும் வெட்டுகிறீர்கள். MGNREGA திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொடர்ந்து நீங்கள் முயற்சித்தால், உங்களை யாரும் மன்னிக்க மாட்டார்கள்" என்று விமர்சித்திருந்தார்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications