30 ஆண்டு முந்தைய பிரச்னைக்காக.. வங்கி கணக்கு முடக்கம்! விளம்பரம் செய்ய கூட பணம் இல்லை; ராகுல் காந்தி
டெல்லி: 30 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்னைக்காக சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதனால், வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கவும், விளம்பரம் செய்யவும் கூட எங்களிடம் பணம் இல்லை என ராகுல் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 2019ம் ஆண்டை போலவே, 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. காங்கிரஸை பொறுத்த அளவில் இரண்டு கட்டங்களாக ஏற்கெனவே வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இன்று காலை டெல்லியில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கூட்டாக செய்தியார்களை சந்தித்தனர். அதில், தேர்தல் ஜனநாயக முறையில் நடத்தப்படுவது அவசியம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார். பேட்டியின்போது அவர் பேசுகையில்,
"தேர்தல் பாரபட்சமின்றி நடத்தப்படுவது ஜனநாயகத்திற்கு அவசியமானது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதற்கு சமநிலையில் வாய்ப்பு இருக்க வேண்டும். தேர்தல் பத்திர முறைகேடு சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன" என்று மத்திய அரசின் மீது விமர்சனங்களை அடுக்கினார்.
இவரை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "30 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்னைக்காக தற்போது காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. ரூ.14 லட்சம் வருமான வரி பிரச்னைக்காக காங்கிரஸின் ஒட்டுமொத்த நிதியும் முடக்கப்பட்டது. ஒரு குடும்பத்தின் நிதி ஆதாரம் அனைத்தும் முடக்கப்பட்டால் அந்த குடும்பம் எப்படி பசியால் வாடுமோ அதுபோல் காங்கிரஸ் கட்சி உள்ளது. ஒட்டுமொத்த நிதி ஆதாரமும் முடக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினரால் பேருந்து, ரயில்களில் பயணிக்க கூட முடியவில்லை.
தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்னர் வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் இதை திட்டமிட்ட செயல் என்றே நாங்கள் கூறுகிறோம். வங்கி கணக்கு முடக்கம் விவகாரத்தில் நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக அழித்துவிட்டது.
தேர்தலுக்கு முன் பிரதான எதிர்க்கட்சியை முடக்குவது எந்த வகையில் ஜனநாயகம்?. வேட்பாளர்களுக்கு செலவு செய்ய முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கவும், விளம்பரம் செய்யவும் கூட எங்களிடம் பணம் இல்லை. 20% வாக்கு வங்கியை வைத்துள்ள காங்கிரஸால் வெறும் ரூ.2 கூட செலவு செய்ய முடியவில்லை. பொருளாதார ரீதியாக காங்கிரஸ் கட்சியை ஒடுக்க நினைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து கேள்வி கேட்க வேண்டியது நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் கடமை ஆகும்" என்று கூறியிருந்தார்.
காங்கிரஸை பொறுத்த வரையில் இந்த தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்து இந்தியா கூட்டணி என்கிற பெயரில் தேர்தலை எதிர்கொள்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்திருக்கிறது. தென் மாநிலங்களில் ஓரளவு காலோச்சினாலும், வட மாநிலங்களில் மீண்டும் கட்சி உயிர்த்தெழுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications