டெல்லியில் மம்தா பானர்ஜி கைது.. சிறை வாகனத்தில் முக்கிய திரிணாமுல் தலைவர்கள்!
டெல்லி: மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமுல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி இப்போது டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 தலைவர்களும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் எம்பி சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி இன்று டெல்லியில் போராட்டத்தை அறிவித்திருந்தது. தலைநகர் டெல்லியில் இன்று காலை முதலே பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது.

இதற்கிடையே மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமுல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி இப்போது டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 தலைவர்களும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் எம்பி சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "மம்தாவும் நாங்கள் ஐந்து பேரும் அவரது இல்லத்திற்கு வெளியே டெல்லி போலீசார் மற்றும் சிஆர்பிஎஃப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளோம். சிறை கைதிகளை ஏற்றி செல்லும் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். எங்களை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பதும் தெரியவில்லை" என்று கூறியுள்ளார். இந்தியாவில் ஜனநாயகத்தின் செத்துவிட்டதையே இது காட்டுவதாக சாகேத் கோகலே விமர்சித்துள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. கரப்பான் பூச்சி கட்சியின் முக்கிய தலைவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த போராட்டத்தில் மம்தா பங்கேற்பார் என்றே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்..


Click it and Unblock the Notifications
