அழகுத் தம்பி.. "பர்த்டே பேபி" ஷாருக் கானுக்கு மமதாவின் பாசக்கார வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு 54 வயது ஆகி விட்டது. இந்த பிறந்த நாளுக்கு அவருக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து அவரது அக்காவிடமிருந்து வந்துள்ளது. அவர்தான் மமதா பானர்ஜி. அழகுத் தம்பி என்று விளித்து ஷாருக் கானை மகிழ்வித்துள்ளார் மமதா பானர்ஜி.

ஷாருக் கானுக்கு இன்று 54வது பிறந்த நாள். உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் இதை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். நேற்று முதலே இதை டிவிட்டரிலும் டிரெண்டாக்கி வருகின்றனர். பல்வேறு தலைவர்கள், திரையுலகினர், பல்துறைப் பிரமுகர்கள் ஷாருக் கானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.

Mamata Banerjee greets her Charming brother Sharukh Khan on his birth day

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் ஷாருக் கானுக்கு சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் ஷாருக் கானுக்கு மமதா ராக்கி கட்டும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

தனது வாழ்த்துச் செய்தியில், மமதா பானர்ஜி கூறுகையில், ஷாருக் கானுக்கு அன்பார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடனும், வாழ்க்கையில் மேலும் பல வெற்றிகளையும் பெற்று வாழ எனது அழகுத் தம்பியை வாழ்த்துகிறேன். மேற்கு வங்கத்தின் நல்லெண்ண தூதராக உங்களைக் கொண்டிருப்பதற்குப் பெருமைப்படுகிறேன். தொடர்ந்து உங்களது திரைப்படங்கள் மூலம் எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் ஷாருக் கான்.

இன்னொரு டிவீட்டில், விரைவில் 25வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன் என்றும் ஷாருக் கானை வாழ்த்தியுள்ளார் மமதா பானர்ஜி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+