மதுபோதையில் காரை தானம் செய்த நபர்! அதுக்கு அப்புறம் அவர் செஞ்ச காரியம் இருக்கே! யாரும் எதிர்பார்க்கல
டெல்லி: குடிபோதையில் ஒருவர் எந்தளவுக்கு முட்டாள்தனமாக நடந்து கொள்வார் என்பதை விளக்கும் வகையில் டெல்லியில் ஒரு வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
இப்போது ஒவ்வொரு நாளும் மதுவுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.. முன்பெல்லாம் வீதியில் ஒரு சிலர் மட்டுமே மது குடிப்போராக இருந்தார்கள். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாகவே மாறிவிட்டது.
ஒரு தெருவில் ஒரு சிலர் மது குடிக்காமல் இருந்தாலே அதிசயம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இப்படி பலரும் மதுவுக்கு அடிமையாவதால் பல விதமான உடல்நிலை பாதிப்புகளும் கூட ஏற்படுகிறது. அவர்களை மட்டுமின்றி இது குடும்பத்தினரையும் பல விதங்களில் பாதிக்கிறது.
டெல்லி: குடித்துவிட்டு இவர்கள் செய்யும் சேட்டைகளை எல்லாம் தனியாகச் சொல்லி முடிக்க முடியாது. மது குடித்தால் அவர்களைக் கட்டுப்படுத்துவதே பெரிய சிரமமாக இருக்கும். இதற்கிடையே டெல்லியில் 30 வயதான ஒருவர் மது குடித்துவிட்டுச் செய்த காரியத்தை உங்களால் நம்பவே முடியாது. மது குடித்த போது பார்த்த நபருக்காக இவர் வள்ளலைப் போல வாரி வழங்கியுள்ளார். அப்படி அவர் என்ன தான் செய்தார் என்பது குறித்துப் பார்க்கலாம்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. டெல்லியில் வசிக்கும் 30 வயதான ஒருவர் அன்றைய தினம் வேலையை முடித்துக் கொண்டு சில் செய்ய முடிவு செய்துள்ளார். இருப்பினும், அன்று இரவுக்குள் அவர் தனது கார், லேப்டாப், மொபைல் மற்றும் 18,000 ரூபாய் ரொக்கத்தை அடையாளம் தெரியாத ஒருவரிடம் பறிகொடுத்துள்ளார். உண்மையில் அவர் பறிகொடுக்கவில்லை அவராகவே வாரி வழங்கியுள்ளார்.
குடிபோதை: கிரேட்டர் கைலாஷ்-II இல் வசிக்கும் அமித் பிரகாஷ் என்பவர் தான் பணத்தை இழந்துள்ளார். வெள்ளிக்கிழமை அவர் மிகவும் குடிபோதையில் இருந்துள்ளார். அப்படியே வந்து தனது காரில் உட்கார்ந்துள்ளார். அப்போது அங்கே வந்த ஒருவர் கார் தன்னுடையது எனக் கூறியுள்ளார். அமித் பிரகாஷ் குடிபோதையில் இருந்ததால் அது தன்னுடைய கார் என்பதைக் கூட மறந்து காரை விட்டு இறங்கிவிட்டாராம்.
இதுதான் சான்ஸ் என்று அந்த நபரும் காரை அப்படியே அலாக்காக எடுத்துச் சென்றுவிட்டார். இதையடுத்து வேறு வழியில்லாமல் பிரகாஷ் மெட்ரோவை பிடித்து தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். ஓவர் போதையில் இருந்ததால் அவர் அன்று அப்படியே தூங்கிவிட்டார். மறுநாள் தான் அவருக்கு என்ன நடந்தது என்றே புரிந்துள்ளது.
தான் வசமாக ஏமாந்து போனதை உணர்ந்த பிரகாஷ் உடனடியாக போலீஸ் நிலையத்திற்குச் சென்று இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அடையாளம் தெரியாத நபரைத் தேடி வருகின்றனர்.
என்ன நடந்தது: பிரகாஷ் தான் அளித்த புகாரில், "நான் வேலையை முடித்துக் கொண்டு கோல்ஃப் கோர்ஸ் சாலையில் உள்ள மதுபான கடைக்குச் சென்றேன். அங்கே மது குடித்ததில் கடும் போதையில் இருந்தேன். அப்போது 2 ஆயிரம் ரூபாய் மதுவுக்கு நான் 20,000 ரூபாய் கொடுத்துவிட்டேன். நல்வாய்ப்பாக அந்த கடையின் உரிமையாளர் மீதி பணம் 18,000 ரூபாய் பணத்தைத் திருப்பி கொடுத்தார். அதன் பிறகு, நான் என் காரில் சென்று அங்கே மீண்டும் குடிக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் திடீரென வந்த ஒருவர் எனக்கும் மது தருகிறீர்களா எனக் கேட்டார்.
நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன். இருவரும் காரில் இருந்தபடியே தொடர்ந்து மதுவைக் குடித்தோம். கொஞ்ச நேரம் கழித்து அந்த நபர் கார் தன்னுடையது என்றும் காரில் இருந்து இறங்கும்படியும் சொன்னார். அப்போது நான் கடும் மது போதையில் இருந்ததால், கார் என்னுடையது என்பதை மறந்து காரில் இறந்து இறங்கினேன். மெட்ரோவில் தான் நான் வீட்டிற்கு வந்தேன். மறுநாள் தான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்" என்று அவர் புகாரில் தெரிவித்துள்ளார். காரில் தான் லேட்டாப் பர்ஸ் என எல்லாம் இருந்துள்ளது.
அவரிடம் போலீசர் முதற்கட்ட விசாரணையை நடத்தியுள்ளனர். இருப்பினும், பிரகாஷ் அப்போது குடிபோதையில் இருந்ததால் என்ன நடந்தது என அவரால் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை.. இதையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து போலீசார் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications