செம அப்லாஸ்! இந்த இளைஞரின் நவீன பேஷன் ஷோவை பாருங்களேன்!.. என்னா மூளைங்க!
டெல்லி: நெட் போட்ட டிரஸ், கூடை டிரஸ் என பல்வேறு விதமான பேஷன் ஷோக்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள பேஷன் ஷோ வீடியோவை பார்க்கும் போது வாய் விட்டு சிரிக்கிறார்கள்.
Recommended Video
சிறு குழந்தைகளுக்கு பேன்சி டிரஸ் எனும் மாறுவேட போட்டி நடத்தப்படும். குழந்தைகளும் அரசியல்வாதிகள், விடுதலை போராட்ட வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் போல் வேடமிட்டு பரிசுகளை தட்டி செல்வர்.
அது போல் பெரியவர்களானது ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியே பேஷன் ஷோக்கள் நடைபெறுகின்றன. நவீன காலமாற்றத்திற்கேற்ப உடைகளிலும் மாற்றங்கள் வந்தன.

புடவை
அப்போதெல்லாம் புடவை, சல்வார், பேன்ட், சர்ட், ஜீன்ஸ், பாவாடை, குட்டை பாவாடை ஆகியவற்றைக் கொண்டு பேஷன் ஷோ நடத்துவார்கள். ஆனால் போட்டிகள் அதிகமானதால் உடைகளிலும் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது. கூடை போன்று உடை அணிதல், வலை துணியால் உடை அணிதல், முழு உடையில் டிசைன் கட்டிங் என பலவிதங்கள் உள்ளன.

ஒய்யார நடை
இந்த உடைகளை அணிந்து கொண்டு ஒய்யார நடையில் வருவார்கள். இவர்களில் யார் நடுவர்களின் மனதை கவர்கிறார்களோ அவர்தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அதே போல் ஆண்களும் பேன்ட் சர்ட்டில் எத்தனை வகையான டிசைன்களை செய்ய முடியுமோ அது போல் செய்து அசத்துவார்கள்.

வீடியோ
ஆனால் இன்டர்நெட்டில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு இளைஞர் புது வகையான பேஷன் ஷோவை மறுஉருவாக்கம் செய்துள்ளார். முதலில் வாக்கிங் ஸ்டிக்கை அணிந்து கொண்டு கேட் வாக்கில் நடக்கிறார். அடுத்தது துருப்பிடித்த ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டை பெரிய பாவாடை போல் அதே நேரத்தில் நல்ல ஷேப்புடன் அணிந்த படி வருகிறார்.

கேட் வாக்
அடுத்தது ஒரு சிறுமியை இடுப்பில் அமரவைத்து கொண்டு ஒரு கையை இடுப்பில் வைத்தபடி கேட் வாக், அடுத்தது மணல் சலிக்கும் ஜல்லடையை கழுத்தில் மாட்டிக் கொண்டு வலை துணி போல் நடத்தல், பின்னர் பெஞ்சை தலைக்கு மேல் வைத்துக் கொண்டு அதில் இரு கைகளையும் ஸ்டைலாக போட்டு கொண்டு வருதல், ஏணியை கழுத்தில் மாட்டிக் கொண்டு வருதல் நடந்து வருகிறார்.
|
பேரல், மர ஏணி
கேட்டை மாட்டிக் கொண்டு வருதல், பேரலை தலையில் கவிழ்த்தபடி வருதல் என அந்த இளைஞர் செய்யும் பேஷன் ஷோவை பார்க்கும் போது செம காமெடியாக இருக்கிறது. அதாவது வீட்டு உபயோக பொருட்களை வைத்து பேஷன் ஷோவை நடத்திவிட்டார். இந்த வீடியோவை பார்க்கும் பலர் பாராட்டி வரும் நிலையில் ஒருவரோ இது பேஷன் ஷோவால் இல்லை யார் வீட்டிலோ திருடிக் கொண்டு வருகிறாரா என கேட்டு மேலும் சிரிப்பை வரவழைக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications