நேர்காணலுக்கு முன்கூட்டியே வந்தது தவறு.. இளைஞருக்கு வேலை தர மறுத்த பிரபல நிறுவனம்.. இதெல்லாம் ஓவர்
டெல்லி: எப்போதும் நாம் நேர்காணலுக்குச் செல்லும்போது குறித்த நேரத்திற்கு முன்கூட்டியே செல்லச் சொல்வார்கள். ஏனென்றால் கடைசி நேரத்தில் எதாவது பிரச்சினை ஆகிவிட்டால் நேர்காணலுக்குச் செல்லத் தாமதம் ஆகிவிடும். இதனால் தேவையில்லாத குழப்பமே ஏற்படும். ஆனால், இங்கு ஒருவர் சீக்கிரம் வந்ததாலேயே அவருக்கு வேலை கிடைக்காமல் போய் இருக்கிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாக வேலைக்கு நேர்காணல்களுக்குச் செல்லும்போது, Punctuality அதாவது நேரம் தவறாமை முக்கியமான ஒரு பாயிண்டாக பார்க்கப்படுகிறது. சொன்ன நேரத்தில் சரியாகச் சென்றால் அது நல்ல ஒரு இமேஜ்ஜை உருவாக்கும். ஆனால் இதுபோல கொஞ்சம் முன்கூட்டியே நேர்காணலுக்கு வந்த நபரை அதே காரணத்தைச் சொல்லி வேலைக்கு எடுக்க மறுத்துள்ளனர்.

நேர்காணலுக்குச் சீக்கிரம் வந்த இளைஞர்
இது தொடர்பான லிங்க்ட் இன் போஸ்ட் இணையத்தில் இப்போது மிகப் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதாவது அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் பிரபலத் துப்புரவு நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவர் மேத்யூ பிரீவெட். அவர் தான் இதுபோல சீக்கிரம் வந்ததை ஒரு காரணமாகச் சொல்லி வேலைத் தர முடியாது என மறுத்திருக்கிறார்.
இந்த மேத்யூ தனது அலுவலகத்தில் நிர்வாகி பணிக்கு நேர்காணல் நடத்தியிருக்கிறார். அதில் நேர்காணலுக்குச் சொன்ன நேரத்தை விட 25 நிமிடங்களுக்கு முன்கூட்டியே ஒருவர் வந்ததாகவும் அந்த குறிப்பிட்ட நபரை வேலைக்கு எடுக்காமல் இருக்க இதுபோல அவர் சீக்கிரம் வந்ததே காரணம் என்று பதிவிட்டுள்ளார்.
கிளம்பிய விவாதம்
அவர் மேலும், "கடந்த வாரம் ஒருவர் நேர்காணலுக்கு 25 நிமிடங்கள் முன்னதாக வந்தார். நான் அவரை ஏன் வேலைக்கு எடுக்கவில்லை என்பதற்கான முக்கிய காரணமாக அது இருந்தது" என்று பதிவிட்டுள்ளார். மேலும், இதுபோல திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்கூட்டியே வருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்றும் நெட்டிசன்களிடையே கேட்டிருந்தார். அவரது போஸ்ட் லிங்க்ட் இன் தளத்தில் டிரெண்டாது. சிலர் மேத்யூக்கு சப்போர்ட்டாக கருத்து சொன்னாலும், பலரும் அவருக்கு எதிரான கருத்துகளையே குறிப்பிட்டனர்.
சீக்கிரம் வருவது தவறு
இதையடுத்து மேத்யூ ஏன் வேலைக்கு எடுக்கவில்லை என்ற காரணத்தை மேலும் தெளிவுபடுத்தினார். சற்று சீக்கிரமாக வருவது நல்லது என்றாலும், ரொம்ப சீக்கிரம் வருவது என்பது மோசமான நேர மேலாண்மை மற்றும் சமூக விழிப்புணர்வு இல்லாததையே காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "சீக்கிரமாக வருவது நல்லது தான். அதேநேரம் ரொம்ப சீக்கிரமாக வருவது ஒருவரது நேர மேலாண்மை மோசமாக இருப்பதைக் காட்டுகிறது.
அவர் ரொம்பவே சீக்கிரம் வந்துவிட்டதால் எனக்கும் அது ஒருவித அவசர உணர்வை ஏற்படுத்தியது. நேர்காணலைச் சரியாக நடத்த முடியவில்லை. மேலும், எனது அலுவலகம் சிறியது. அவர் சீக்கிரமாக வந்ததால் எனது பிஸ்னஸ் அழைப்புகளை அவர் கேட்டுவிடுவாரோ என்ற சங்கடமும் ஏற்பட்டது. நேர்காணலுக்கு வருவோர் ஐந்து முதல் 15 நிமிடங்கள் வரை முன்னதாகவே வருவது தான் சரியானது. அதற்கு முன்பு வருவது சரியானது இல்லை. நேரம் குறித்து கவனம் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
பொங்கி எழுந்த நெட்டிசன்கள்
அவரது இந்த விளக்க போஸ்ட் லிங்க்ட் இன் மட்டுமின்றி பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் டிரெண்டானது. சிலர் மேத்யூ சொல்வதிலும் பாயிண்டு இருக்கிறது என அவருக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்தனர்.
அதேநேரம் பலரும் நேர்காணலுக்கு வந்த நபருக்கே ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்தனர். அதன்படி ஒருவர், "நேர்காணலுக்கு வந்த நபர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் நபராக இருந்தால் அவரால் பக்காவாக திட்டமிட முடியாது. இதனால் நேர்காணலுக்குத் தாமதமாகிவிடக்கூடாது என்பற்காக அவர் முன்கூட்டியே வந்திருக்கலாம். இதெல்லாம் ஒரு காரணம் என வேலைக்கு எடுக்காமல் இருப்பது தவறு" எனப் பதிவிட்டுள்ளார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications