7 ஆண்டுகளில் 43 முறை லவ் புரபோஸ் செய்த லூக்! கேன்டில்லைட்டிலும் மயங்காத சாரா! கின்னஸில் இடமா?
டெல்லி: இளைஞர் ஒருவர் 7 ஆண்டுகளாக 43 முறை காதலை சொன்னதும் ஒரு வழியாக மனம் இறங்கிய பெண், காதலை ஏற்றுக் கொண்டார். இதனால் அந்த இளைஞர் கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற வேண்டும் என அந்த பெண்ணே கோரிக்கை விடுத்துள்ளார். பிக் அப், டிராப், எஸ்கேப் என இளைஞர்கள் இருக்கும் நிலையில் இவர் 7 ஆண்டுகளாக காத்திருந்தது அவரது தீரா காதலை வெளிப்படுத்துகிறது என நெட்டிசன்கள் புகழாரம் சூட்டி வருகிறார்கள்.

சாரா வின்டிரிப் என்ற 38 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் லூக் வின்டிரிப் என்ற 36 வயது இளைஞர் முயற்சி செய்தார். ஆனால் லூக்கின் காதலை சாரா ஏற்கவில்லை. லூக்கும் எத்தனையோ முறைகளில் தனது காதலை தெரிவித்தார்.
லூக்கை அந்த பெண் ஏற்க மறுத்துக் கொண்டே வந்தார். சாராவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். எனவேதான் லூக்கை ஏற்க மறுத்துக் கொண்டே இருந்தாராம். இந்த நிலையில் மனம் தளராமல், 43 ஆவது முறையாக லூக், சாராவிடம் தனது காதலை ஏற்குமாறு கேட்டார்.
துள்ளி குதித்த இளைஞர்
அப்போது திடீரென சாரா, லூக்கின் காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார். இதனால் லூக், சந்தோஷத்தில் வானத்திற்கும் பூமிக்கும் துள்ளி குதித்தார். பின்னர் இருவருக்கும் கடந்த மே 17ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் லூக்கின் காதல் புரபோசலையும் சாரா நிராகரித்ததையும் பலர் அதிர்ச்சியாக பார்க்கிறார்கள்.
காதல்
இதுகுறித்து சாரா, ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "லூக் என்னிடம் காதலை சொல்வார் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எனக்கும் அவர் மீது காதல் இருந்தது. ஆனால் என்னால் அப்போது அவரது காதலை ஏற்க முடியவில்லை. என் குழந்தைகள்தான் எனக்கு முக்கியம்.
லவ் புரபோஸ்
நான் லூக்கை திருமணம் செய்து கொள்ள அவர்களும் விரும்ப வேண்டும். அதுதான் சரி என்றேன். அதற்கு லூக் "நல்லது, ஆனாலும் நான் மீண்டும் மீண்டும் உன்னை கேட்டுக் கொண்டே இருப்பேன்." என்றார். கடந்த 7 ஆண்டுகளாக லூக் டிசைன் டிசைனாக love propose செய்தார்.
கேன்டில் லைட் டின்னர்
அதாவது பராகுவேயில் ஒரு கோட்டையை வாடகைக்கு எடுத்து அங்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவை உட்கொண்டவாரே காதலை சொன்னார். இது போல் ஜமைக்கா கடற்கரையில் குதிரை சவாரியின் போதும் காதலை லூக் தெரிவித்தார்.
42 ஆவது முறை
ஆனாலும் சாரா மனம் இறங்கவில்லை. 42 ஆவது முறையாக லூக், சாராவிடம் காதலை சொன்ன போது," அடுத்த முறை உன் காதலுக்கு நிச்சயம் ஓகே சொல்வேன்" என்றாராம். இதையும் பொறுமையாக கேட்ட லூக், ஓராண்டு காத்திருந்தாராம். பின்னர் சாராவை தென்மேற்கு லண்டனில் நேரம் கணக்கிடப்படும் இடத்திற்கு அழைத்துச் சென்றாராம்.
இதயத்தை திருடியவர்
அப்போது லூக், சாராவிடம், "இதுதான் உலகின் மையம். நீதான் என் உலகின் மையம். நான் உன்னை திருமணம் செய்ய விரும்புகிறேன்" என கூறி சாராவின் இதயத்தை ஒருவழியாக திருடிவிட்டார். அவருக்கு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் தர வேண்டும் என்றும் சாரா தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications