எதே இந்த வண்டில பால் வியாபாரமா? பைக் லவ்வர்ஸ் ப்ளீஸ் இந்த போட்டோவை பார்க்காதீங்க!
டெல்லி: பால்காரர் ஒருவரின் பைக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவரது புகைப்படங்கள் வைரலாகக் காரணம், அவர் பால் கேன்களைக் கட்டி, பால் விற்பனை செய்யும் விலையுயர்வான பைக் தான்.
பால்காரர் என்றாலே நமக்கு அண்ணாமலை (அட, ரஜினி படத்தைச் சொல்றோம்ங்க..) ஸ்டைலில், ஒரு சைக்கிளில் குழாய் வைத்த பால் கேன்களைக் கட்டிக் கொண்டு, சைக்கிளின் முன்பகுதியில் சிறிய மணியை அடித்துக் கொண்டே வருபவர்கள்தான் முன்பெல்லாம் நினைவுக்கு வருவார்கள். இப்போது அதில் இருந்து சற்று முன்னேறி, ஸ்கூட்டி, பைக் என சற்று பெரிய வாகனங்களில் பால்காரர்கள் வலம் வருகிறார்கள்.
ஆனால், பைக் காதலர்களின் கனவு வண்டிகளில் ஒன்றான ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கில் ஒருவர் பால் கேன்களைக் கட்டிக் கொண்டு பால் டெலிவரி செய்தால்... கேட்பதற்கே வியப்பாக இருக்கிறதல்லவா?
அப்படிப்பட்ட ஒரு பால்காரரின் புகைப்படங்கள்தான் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

ஹார்லி டேவிட்சனில் பால் வியாபாரம்
வழக்கத்திற்கான மாறாக, நம்மை புருவத்தை உயர்த்த வைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எப்போதுமே சமூகவலைதளங்களில் பேசுபொருளாகி விடும். இப்போதும் அப்படித்தான், பால்காரர் ஒருவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பலரும் ஆச்சர்யத்தோடு அந்த புகைப்படங்களைப் பார்ப்பதற்கு முக்கியக் காரணம், அந்த பால்காரர் மிகவும் விலை உயர்ந்த பைக்கான ஹார்லி டேவிட்சன் பைக்கில் பால் வியாபாரம் செய்வதுதான்.

ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி
நீங்கள் பைக் லவ்வராக இருந்தால், 'எதே ஹார்லி டேவிட்சன் பைக்கில் பால் வியாபாரமா?' என நீங்கள் ஷாக் ஆகலாம். ஒருவேளை பைக்குகள் பற்றி அதிகம் தெரியாதவர் என்றால், முதலில் ஹார்லி டேவிட்சன் பைக்கைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கும் மயக்கமே வரும்.

ஆதர்ஷ பைக்
பைக் லவ்வர்ஸின் ஆதர்ச பைக்குகளில் ஒன்றுதான் இந்த ஹார்லி டேவிட்சன். இதன் விலை ஜஸ்ட் 5 லட்ச ரூபாய் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது, இந்த பைக்கை ஓட்டிப் பார்த்துவிட மாட்டோமா என ஏங்குபவர்கள் இங்கு அதிகம். ஏனெனில் இது பணக்காரர்களின் வண்டியாகவே கருதப்படுகிறது.

வேறு விபரம் இல்லை
இப்படிப்பட்ட பைக்கில்தான், பால்கேன்களைக் கட்டி பால் வியாபாரம் செய்து வருகிறார் அந்நபர். வைரலான புகைப்படத்தில் இருப்பவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், நிஜமாகவே அவர் பால் வியாபாரி தானா அல்லது விளம்பரத்திற்காக இப்படிச் செய்தாரா எனத் தெரியவில்லை. ஆனால், அவரது இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

நெட்டிசன்கள் சந்தேகம்
இந்தப் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், 'யாரு ராசா நீ.. இவ்ளோ காஸ்ட்லியான பைக்குல பால் விக்குற..?' என்பது போன்ற கமெண்ட்களையும், 'நானா இருந்தா நிச்சயம் இப்டி செய்ய மாட்டேன்' என்பது மாதிரியான கமெண்ட்களை வெளியிட்டு வருகின்றனர். இன்னும் ஒரு சிலரோ, 'இந்தப் புகைப்படத்தில் இருப்பவரைப் பார்த்தால் நிஜமான பால் வியாபாரி மாதிரி தெரியவில்லை. வேறு ஏதோ காரணத்திற்காக இப்படிச் செய்திருக்கலாம்' என சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications