கட்டாய சர்வீஸ் சார்.. பிரபல ஹோட்டலுக்கு குட்டு வைத்த மத்திய அரசு.. இனிமேல் ஒரு போன் போடுங்க போதும்!
டெல்லி: சில உணவகங்கள் வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்தி சர்வீஸ் சார்ஜை வசூலிக்கும் நிலையில், இது சட்டவிரோதம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்கள் இருந்தும், சில உணவகங்கள் கட்டாயப்படுத்தி சர்வீஸ் சார்ஜ் வசூலித்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்தது.
சமீப காலங்களாகவே ஹோட்டல்களில் பில்லுடன் சேர்ந்து சில கூடுதல் கட்டணத்தை வசூலிக்கிறார்கள். பெரும்பாலான ஹோட்டல்களில் இப்போது சர்வீஸ் சார்ஜ் தனியாக வசூலிக்கிறார்கள். இவை பொதுவாக மொத்த பில்லில் 10%ஆக இருக்கும்.

சர்வீஸ் சார்ஜ்
இந்த சர்வீஸ் சார்ஜ் ஆப்ஷனல் மட்டுமே. அதாவது வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் அதைத் தரலாம். சர்வீஸ் சார்ஜ் கட்ட விரும்பாத நபர்களிடம் அதை வசூலிக்கக்கூடாது. ஆனால், சில உணவகங்கள் வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்துவதாகப் புகார்கள் வந்துள்ளன. இந்த விவகாரத்தில் தான் நுகர்வோர் விவகார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி கட்டாய சர்வீஸ் சார்ஜ் வசூலித்த பார்பிக்யூ நேஷன் (Barbeque Nation) உணவகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டணத்தை நீக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சட்டம் சொல்வது என்ன
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் கீழ், கட்டாய சர்வீஸ் சார்ஜ் நியாயமற்றது என்று சிசிபிஏ எனப்படும் மத்திய கன்சியூமர் புரோடக்ஷன் ஆத்தாரிட்டி அறிவித்துள்ளது. உணவகங்கள் இதுபோல தானாகக் கூடுதல் கட்டணத்தைச் சேர்க்க, வேறு பெயரில் வசூலிக்க, அல்லது வாடிக்கையாளர்களைச் செலுத்த வலியுறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.. டெல்லி உயர் நீதிமன்றமும் இந்த வழிகாட்டுதல்கள் செல்லும் என்று தனது உத்தரவில் உறுதி செய்துள்ளது. வாடிக்கையாளர்களை சர்வீஸ் சார்ஜ் செலுத்தக் கட்டாயப்படுத்தக்கூடாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
வழிகாட்டுதல்கள்
- ஹோட்டல்கள்/ உணவகங்கள் சர்வீஸ் சார்ஜ்ஜை தானாகச் சேர்க்கக்கூடாது.
- வேறு எந்தவொரு பெயரிலும் சர்வீஸ் சார்ஜ்ஜை கட்டாயப்படுத்தி வசூலிக்கக்கூடாது.
- சர்வீஸ் சார்ஜ் செலுத்த மறுத்ததற்காகச் சேவை மறுக்கப்படக்கூடாது.
- இந்தச் சட்டவிரோதக் கட்டணங்கள் மீது ஜிஎஸ்டி (GST) விதிக்கப்படாது.
நடவடிக்கை
தொடர்ந்து கட்டாய சர்வீஸ் சார்ஜ் வசூலித்த 27 உணவகங்கள் மீது CCPA அபராதம் விதித்தது. சில கடைகள் சம்மதமே இல்லாமல் பில் தொகையில் 10% வரை இதுபோல கூடுதல் தொகையைச் சேர்த்துள்ளன. மேலும், இந்தக் கூடுதல் கட்டணத்திற்குத் தனியாக ஜிஎஸ்டியும் கூட போட்டுள்ளனர். இது தொடர்பாகத் தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் புகார்கள் வந்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிரபல பார்பிக்யூ நேஷன் உணவகத்தில் கடந்த மார்ச் 2025ல் ₹335 கூடுதல் கட்டணம் சேர்க்கப்பட்டதாகப் புகார் வந்தது. இதனால் இதுபோல கூடுதல் தொகையை நிறுத்த உத்தரவிடப்பட்டது. எதிர்காலத்தில் இதுபோல கட்டாய சர்வீஸ் சார்ஜ் வசூலிக்க மாட்டோம் என்று பார்பிக்யூ நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலும், கூடுதல் கட்டணம் வசூலித்தோரிடம் முழுப் பணத்தையும் திருப்பி அளிக்கவும் முன்வந்துள்ளது. இதையடுத்து இந்த புகார் முடித்து வைக்கப்பட்டது.
ஒரு போன் போதும்
தற்போதைய விதிகளின்படி வாடிக்கையாளர்கள் சர்வீஸ் சார்ஜ் செலுத்தத் தேவையில்லை. அது நீங்கள் கொடுக்கும் டிப்ஸ் போல தான். விரும்பினால் கொடுக்கலாம்.. இல்லையென்றால் கொடுக்க தேவையில்லை. எந்தவொரு உணவகத்திற்கும் சர்வீஸ் சாஜ்ஜை கட்டாயப்படுத்தி வசூலிக்கும் உரிமை இல்லை. மேலும், சர்வீஸ் சார்ஜை வேறு பெயரிலும் வாங்க முடியாது. எனவே, எதாவது உணவகம் சர்வீஸ் சார்ஜ்ஜை செலுத்த கட்டாயப்படுத்தினால் அது குறித்து 1915 என்ற நம்பரில் தாராளமாகப் புகாரளிக்கலாம்!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications