நீரவ் மோடி, லலித் மோடி நினைவிருக்கா? தப்ப விட்டவர் மோடி.. ராகுல் காந்திக்கு மாணிக்கம் தாகூர் ஆதரவு
டெல்லி: மோடி குறித்து அவதூறு பரப்பியதாக கூறி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், நீரவ் மோடி, லலித் மோடியை திருடர்கள் என்று அழைப்பதில் என்ன தவறு உள்ளது என்று விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் தேசிய தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியபோது பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு பின்னால் இருக்கும் "மோடி" என்ற துணை பெயரை குறிப்பிட்டு ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். நாடு முழுவதும் அவரது பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி மீது வழக்கு
ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடி சமூகம் மீது அவதூறாக பேசியதாக கூறி அதனை எதிர்த்து குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். சூரத் நீதிமன்றத்தில் சுமார் 4 ஆண்டுகளாக இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

சூரத் நீதிமன்றம்
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். சூரத் நகருக்கு வந்த அவருக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு
சூரத் நகரம் முழுவதும் நாங்கள் ராகுல் காந்திக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறி காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர்களை ஒட்டி இருந்தனர். இந்துஸ்தானின் சிங்கம் ராகுல் காந்தி என்று அவர்கள் குறிப்பிட்டனர். ராகுல் காந்தி செல்லும் வழி நெடுகிலும் காங்கிரஸ் பாஜகவின் சர்வாதிகாரத்துக்கு பணியாது என்று அக்கட்சியினர் பதாகைகளை ஏந்தி வரவேற்பு தெரிவித்தனர்.

குற்றவாளி என தீர்ப்பு
சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் இத்தகைய வரவேற்புக்கு மத்தியில் ராகுல் காந்தி ஆஜரான நிலையில், அவதூறு வழக்கில் அவரை குற்றவாளி என மாஜிஸ்திரேட் வர்மா தீர்ப்பு வழங்கினார். அவருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியது.

ராகுல் காந்தி கருத்து
இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ராகுல் காந்தி, ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "என்னுடைய மதம் அகிம்சை மற்றும் உண்மையை சார்ந்தது. உண்மையே எனது கடவுள். அதை அடைவதற்கான வழியே அகிம்சை." என குறிப்பிட்டு இருக்கிறார்.

மாணிக்கம் தாகூர் ட்வீட்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், நீரவ் மோடியை திருடன் என்று சொல்வதில் என்ன தவறு? லலித் மோடியை திருடன் என்று சொல்வதில் என்ன தவறு? யார் அவர்களை தப்பிக்க விட்டது? மோடிதான் அனுமதித்தார். ராகுல் காந்தி உண்மையாக காந்தியை பின்பற்றுபவர். ராகுல் காந்தி = நம்பிக்கை. ராகுல் காந்தியுடன் நாங்கள் நிற்கிறோம்." என்று பதிவிட்டு உள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications