’ரா’ தலைவராக வடகிழக்கு 'எக்ஸ்பர்ட்’ ரவி சின்ஹா! மணிப்பூர் சிஎம் கடும் வார்னிங்- ஒர்க் அவுட் ஆகுமா?
டெல்லி: நாட்டின் ரா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சின்ஹா, வடகிழக்கு மாநில விவகாரங்களில் வல்லுநர். மணிப்பூர் பற்றி எரியும் நிலையில் ரவி சின்ஹாவின் நியமனம் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது பெரும் எதிர்பார்ப்பு.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே மோதல் ஒன்றரை மாதங்களாக தொடருகிறது. 100க்கும் மேற்பட்டோரை இந்த இன மோதல் பலி கொண்டுள்ளது. மணிப்பூரில் 50,000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ள்னர்.

ஆனால் பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு படையினரிடம் இருந்து ஆயுதங்களை கொள்ளையடித்தும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்படும் ஆயுதங்களையும் மைத்தேயி- குக்கி இனக்குழுவினர் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் வன்முறையாளர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பெற பல்வேறு வகையிலான நடவடிக்கைகளை பாதுகாப்பு படை, மாநில நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
மணிப்பூரில் 50 நாட்களாக தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் மாநில பாஜக அரசு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில முதல்வர் பைரோன் சிங் எச்சரிக்கை விடுத்தும் உள்ளார். ஆனால் நிலைமை கை மீறி போய்விட்டதாக அரசியல் கட்சித் தலைர்கள் கூறி வருகின்றனர். இதனால் மணிப்பூர் மாநில பாஜக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலாகும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் முதன்மை உளவு, கொள்கை வகுப்பு அமைப்பான ராவின் புதிய தலைவராக ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1-ந் தேதி முதல் ரவி சின்ஹா பொறுப்பேற்க உள்ளார். சத்தீஸ்கர் மாநில ஐபிஎஸ் கேடரான ரவி சின்ஹா, வடகிழக்கு மாநில விவகாரங்களில் வல்லுநர் எனவும்
கூறப்படுகிறது. ரவி சின்ஹா நியமன அறிவிப்பு வெளியான அதே நேரத்தில் மணிப்பூரில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். ஏற்கனவே ராணுவ வீரர்கள் சிலர், வன்முறயாளர்களால் படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர்
மணிப்பூர் தற்போது பற்றி எரியும் நிலையில் ரவி சின்ஹாவின் நியமனம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது பாதுகாப்பு படையினரிடையே பெரும் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications