மணிப்பூர் டூ நாகாலாந்து.. மாற்றம் செய்யப்பட்ட ஆளுநர் இல.கணேசன்.. ஜனாதிபதி முக்கிய உத்தரவு!
மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசம் நாகாலாந்து ஆளுநராக மாற்றம்.
டெல்லி: மணிப்பூர் மாநில ஆளுநராக செயல்பட்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இல.கணேசன், நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ் கொள்கையை ஆழமாக கடைபிடித்து வரும் இல.கணேசன், அரசியல் பொதுவாழ்வு காரணமாக திருமணம் கூட செய்து கொள்ளாமல் அண்ணன் குடும்பத்தினருடன் இணைந்து வாழ்ந்து வருபவர்.
பாஜக மூத்த தலைவரான இல கணேசன், மாநிலங்களவை உறுப்பினராகவும், தமிழ்நாடு பாஜக தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வந்த இல கணேசன், பதவிக்காலம் முடியும் முன்னரே கடந்த 2021ஆம் ஆண்டு, மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், இல கணேசன் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

கூடுதல் பொறுப்பு
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநில ஆளுநராக செயல்பட்டு வந்த ஜகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல கணேசன், மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக பெற்றார். இதனையடுத்து மணிப்பூர், மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பையும் இல கணேசன் கவனித்து வந்தார்.

சுமூக உறவு
இதனிடையே தனது அண்ணன் கோபாலனின் 80வது பிறந்தநாளை சென்னையில் வெகு விமரிசையாக நடத்தினார் இல.கணேசன். இதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களை அழைத்து வந்து விழாவில் முன்னிலைப்படுத்தினார். பாஜகவை தீவிரமாக எதிர்த்து வந்த மம்தா பானர்ஜியுடன் சுமூக உறவை இல.கணேசன் கையாண்டது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.

இல.கணேசன் மாற்றம்
இந்த நிகழ்வுக்கு பின், அடுத்த சில வாரங்களில் மேற்கு வங்க ஆளுநராக ஆனந்த் போஸ் நியமிக்கப்பட்டார். இதனால் மணிப்பூர் மாநில ஆளுநராக மட்டும் இல.கணேசன் பணியை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் மணிப்பூர் மாநில ஆளுநராக செயல்பட்டு வந்த இல.கணேசன், தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆளுநராகும் சிபி ராதாகிருஷ்ணன்
13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் தமிழ்நாடு பாஜக தலைவராகப் பணியாற்றிய சிபி ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியின் ராஜினாமாவும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications