மணிப்பூர் வன்முறை: நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழுவின் 3 அறிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்!
டெல்லி: மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழு 3 அறிக்கைகளை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கைகளை ஆய்வு செய்யுமாறு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையே வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம்மோதல்களில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். மோரே எனும் எல்லை நகரத்தை சேர்ந்த மக்கள், அகதிகளாக மியான்மரின் தமு பகுதியிலும் தஞ்சமடைந்தனர்.
பல மாதங்களாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு தடுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இதனால் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. மேலும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானமும் கொண்டு வந்தன.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக வழக்குகளும் தொடரப்படன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், மணிப்பூர் மாநில அரசை கடுமையாக சாடியது. மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக கண்டனம் தெரிவித்தது. அத்துடன் ஓய்வு பெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் பெண் நீதிபதிகள் குழு ஒன்றையும் உச்சநீதிமன்றம் அமைத்தது. மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக இந்த குழு ஆய்வு செய்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழு 3 அறிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளன. இதனை இன்று தெரிவித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த 3 அறிக்கைகளையும் ஆய்வு செய்யவும் உத்தரவிட்டது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications