மணிஷ் சிசோடியா அப்பாவி.. அவரை கைது செய்தது எல்லாம்.. கொந்தளித்த அரவிந்த் கெஜ்ரிவால்!
மணிஷ் சிசோடியா அப்பாவி என்றும் அவரைக் கைது செய்தது தரம் தாழ்ந்த அரசியல் என்றும் மத்திய அரசை கடுமையாக சாடி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட் பதிவிட்டுள்ளார்.
டெல்லி: மணிஷ் சிசோடியா அப்பாவி.. அவரைக் கைது செய்தது தரம் தாழ்ந்த அரசியல் என்று மத்திய அரசை கடுமையாக சாடியுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் தனது ட்விட்டரில் விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். துணை முதல்வராக மணிஷ் சிசோடியாக உள்ளார்.
டெல்லியை பொறுத்தவரை துணை நிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளது. இதனால், ஆம் ஆத்மி ஆட்சி அமைந்ததில் இருந்தே துணை நிலை ஆளுநருக்கும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

புதிய மதுபான கொள்கை
இத்தகைய சூழலில், கடந்த 2021 நவம்பரில் டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய கொள்கையின் அடிப்படையில் 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் கொடுக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதில் பல்வேறு முறைகேடு புகார்களும் எழுப்பப்பட்டது. துணை நிலை ஆளுநர் விகே சக்சேனாவுக்கு புகார்கள் சென்ற நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து ஆம்ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கயை திரும்ப பெற்றுக்கொண்டது.

15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு
இருந்த போதிலும், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

36 பேருக்கு தொடர்பு இருப்பதாக
இந்த குற்றப்பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் எம்.எல்.சியுமான கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்நது. இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விசாரணைக்காக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ஏற்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மணிஷ் சிசோடியா ஆஜரானார்.

144 தடை உத்தரவு
முன்னதாக தன்னை போலி வழக்கில் சிக்க வைக்க பாஜக முயற்சிப்பதாக மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டியிருந்தார். மணிஷ் சிசோடியா விசாரணைக்கு ஆஜராக இருந்ததால் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் உள்பட கட்சியினர் பலரும் சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள சி.ஜி.ஓ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர். இன்று காலை முதலே பரபரப்பாக அப்பகுதி காணப்பட்டது. விசாரணைக்கு ஆஜரான மணிஷ் சிசோடியாவிடம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
இந்த நிலையில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- மணிஷ் சிசோடியா அப்பாவி. அவர் கைது செய்யப்பட்டது தரம் தாழ்ந்த அரசியல். மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதால் மக்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர். அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். மக்கள் அனைத்தையும் புரிந்து கொண்டுள்ளனர். இதற்கு தக்க பதிலடியை கொடுப்பார்கள். எங்களின் உத்வேகத்தை மேலும் ஊக்கப்படுத்தும். எங்களின் போராட்டமும் மேலும் வலுவாகும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications