மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் விடாமல் சமஸ்கிருதத்தை கொண்டாடி மகிழும் பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தமது மன்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் (மனதின் குரல்) "இன்றும் கூட நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி, சம்ஸ்கிருதத்தின்பால், மக்களுக்கு சிறப்பானதொரு ஈர்ப்பு தென்படுகிறது. உலகின் பல நாடுகளில் சம்ஸ்கிருத மொழி தொடர்பாக பல வகையான ஆய்வுகளும், சோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன" என பெருமிதம் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் 30-ந் தேதி மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் திடீரென சமஸ்கிருதத்தில் பேசினார். இதற்கு விளக்கம் அளித்த போது, ன்று சம்ஸ்கிருதத்தோடு தொடர்புடைய ஒரு சிறப்பான சந்தர்ப்பம். இன்று ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று தான் ஆகாசவாணியின் முதல் சம்ஸ்கிருத செய்தியறிக்கை, 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஒலிபரப்பானது. 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தச் செய்தியறிக்கையானது பலரை சம்ஸ்கிருதத்தோடு இணைத்து வைத்திருக்கிறது. நான் ஆல் இண்டியா ரேடியோ குடும்பத்தாருக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். நண்பர்களே, பண்டைய ஞானம் மற்றும் விஞ்ஞானத்தில் சம்ஸ்கிருதத்தின் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. இன்றைய காலத்தின் தேவை என்னவென்றால், நாம் சம்ஸ்கிருதத்துக்கு மதிப்பளிப்பதோடு, நமது அன்றாட வாழ்க்கையிலும் இதை இணைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

சமஸ்கிருத நாள்: இதேபோல இன்றைய மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியிலும், நாம் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியன்று ரக்ஷாபந்தன் நன்னாளைக் கொண்டாடினோம். அந்த நாளன்று உலகம் முழுவதும் உலக சம்ஸ்கிருத தினமும் கொண்டாடப்பட்டது. இன்றும் கூட நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி, சம்ஸ்கிருதத்தின்பால், மக்களுக்கு சிறப்பானதொரு ஈர்ப்பு தென்படுகிறது. உலகின் பல நாடுகளில் சம்ஸ்கிருத மொழி தொடர்பாக பல வகையான ஆய்வுகளும், சோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஐரோப்பாவின் ஒரு நாடான லிதுவேனியாவில் வைடிஸ் விடூனஸ் என்ற ஒரு பேராசிரியர், வித்தியாசமானதொரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார், இதன் பெயர் "சம்ஸ்கிருதம் ஆன் தி ரிவர்ஸ்", அதாவது ஆற்றங்கரைகளில் சம்ஸ்கிருதம் என்பதே இதன் பொருள். சிலர் அடங்கிய ஒரு குழுவானது அங்கே ஓடும் நேரிஸ் ஆற்றின் கரையிலே கூடி, அங்கே வேதங்கள் மற்றும் கீதையை ஓதினார்கள். இப்படிப்பட்டதொரு முயற்சி கடந்த சில ஆண்டுகளாக அங்கே நடந்து வருகிறது. நீங்களும் கூட சம்ஸ்கிருதத்தைப் பெருக்கும் இப்படிப்பட்ட முயற்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டி வாருங்கள் என சுட்டிக்காட்டினார்.
அரசியலும் இளைஞர்களும்: மேலும் அரசியல் பின்புலம் ஏதும் இல்லாத ஒரு இலட்சம் இளைஞர்களை, அரசியலமைப்போடு இணைப்பது குறித்த விஷயமாக, இந்த ஆண்டு செங்கோட்டையிலிருந்து நான் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். என்னுடைய இந்த விஷயம் குறித்து நிச்சயம் எதிர்வினை ஏற்பட்டிருப்பதை அறிகிறேன். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் அரசியலில் பிரவேசிக்க விரும்புகிறார்கள் என்பதுதான். அவர்கள் அதற்காக சரியான நேரத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயம் தொடர்பாக நாடெங்கிலுமிருந்து இளைஞர்கள் கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் பலமான பதிலுரைகள் கிடைத்திருக்கின்றன. பலவகையான ஆலோசனைகளை மக்கள் எனக்கு அளித்திருக்கிறார்கள். தங்களால் இதைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றும் சில இளைஞர்கள் எழுதியிருக்கிறார்கள். தாத்தா அல்லது தாய்-தந்தை என எந்த உறவும் இல்லாத காரணத்தால், விரும்பியும் கூட அவர்களால் அரசியலுக்கு வர இயலவில்லை. கள அளவில் பணியாற்றிய நல்ல அனுபவம் தங்களிடம் இருப்பதால், பிரச்சனைகளுக்கான தீர்வைக் காண்பதில் உதவிகரமாக இருக்க முடியும் என்று இளைஞர்கள் சிலர் எழுதியிருக்கிறார்கள். குடும்ப அரசியல் என்பது புதிய திறமைகளை அழித்து விடுகிறது என்று சில இளைஞர்கள் எழுதியிருக்கிறார்கள். இதுபோன்ற முயற்சிகளால் நமது ஜனநாயகம் மேலும் பலமடையும் என்றும் சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக தங்கள் ஆலோசனைகளை அளித்த அனைவருக்கும் நான் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது நமது சமூக அளவிலான முயற்சிகளால், எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாத இத்தகைய இளைஞர்கள் அரசிலுக்குள் பிரவேசிப்பார்கள், அவர்களுடைய அனுபவம், அவர்களுடைய உற்சாகம் ஆகியன தேசத்திற்குப் பயன்படும் என்றார் பிரதமர் மோடி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications