செஸ் சாம்பியன் குகேஷ், மனுபாக்கர் உள்ளிட்ட நால்வருக்கு கேல் ரத்னா விருது.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படும். நடப்பு ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உலக செஸ் சாம்பியன் குகேஷ் மனுபாக்கர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருக்கிறது. இது தவிர 32 பேருக்கு அர்ஜுனா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கும். இந்தாண்டிற்கான கேல் ரத்னா விருது பட்டியலை விளையாட்டுத் துறை அமைச்சகம் இப்போது வெளியிட்டுள்ளது.

கேல் ரத்னா:
அதில் உலக செயஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹாக்கி வீரர் ஹர்மன்பிரீத், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாக்கர் ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேல் ரத்னா விருது என்பது இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பரிந்துரை பட்டியலில் குகேஷ் மற்றும் மனுபாக்கர் பெயர்கள் இடம்பெறாத நிலையில், இப்போது அவர்கள் பெயரும் விருது பட்டியலில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர 17 பாரா தடகள வீரர்கள் உட்பட 32 வீரர்கள் அர்ஜுனா விருது பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மனு பாக்கர்:
முன்னதாக சமீபத்தில்தான் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் மனு பாக்கர் பெயர் விடுபட்டதாகத் தகவல் வெளியானது.. ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற மனு பாக்கர் பெயர் இல்லாதது பேசுபொருள் ஆனது. அவரது தந்தை ராம் கிஷன் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா ஆகியோர் இதற்கு அதிருப்தி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
22 வயதான மனு பாக்கர், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஒலிம்பிக் தொடரில் இரண்டு விருதுகளை வென்றார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு டீம் என இரண்டு பிரிவுகளில் அவர் வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றார்
குகேஷ்:
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் களமிறங்கிய குகேஷ் சீன வீரரை வீழ்த்தி வாகை சூடினார். 18 வயதான குகேஷ், இதன் மூலம் உலகில் மிகவும் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற நபர் என்ற சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.
ஹர்மன்பிரீத், பிரவீன்
கேல் ரத்னா விருது பெறும் மற்றொரு வீரரான ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் தான் இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் இந்த ஹாக்கி அணி களமிறங்கியது. அதில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. ஜப்பான் ஒலிம்பிக் போட்டியிலும் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி, தொடர்ந்து 2வது முறையாகப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல பாரிஸ் நடந்த பாராலிம்பிக்ஸ் தொடரில் T64 பிரிவில் உயரம் தாண்டுதல் பிரிவில் பிரவீன் தங்கம் வென்று இருந்தார். அவருக்கும் கேல் ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications